சில கேள்விகள் கேட்கப்படுகிறது
என்ன பதில் சொல்லும் நிலை தான்
திருடனுக்கு தேள் கொட்டியதுபோல்
கொஞ்சம் இம்சையாகிறது...-
9 HOURS AGO
23 JUL AT 20:58
நட்சத்திரப் பூக்களும்
உன் நினைவுப் பாக்களும்
என்றும் முடிவிலி தான்...
அள்ள அள்ள குறையாதது-
23 JUL AT 14:15
ஹே... ஹே
ஏன் இந்த இழுவை 🤭
வார்த்தைகளுக்கு செய்யும்
அநியாயம் தானே இதெல்லாம்-
22 JUL AT 23:09
கனவு காணச் சொல்கிறது மனசு
ஆனால் இப்பொல்லாத மூளையோ
கொஞ்சம் நிதானித்து உகந்ததை
யோசிக்கச் சொல்கிறது-
22 JUL AT 21:16
உன் நினைவுகள் என்ன வண்ணம் என்கிறாய்
அட பைத்தியக்காரா உனக்கு தெரியாததா
எனக்கு லாவண்டர் வண்ணம் தான் பிடிக்குமென-
22 JUL AT 12:38
யாருக்கு சமாதான தூது சொல்ல
இந்த வெள்ளை ரோஜாவோ
ஆனால் காதலுக்கு அல்ல
காதல் என்றால் சிவப்பில்
அல்லவா இருந்து இருக்கும்...-
22 JUL AT 9:26
my little one comes home, coz
he calls me to send his dad to
pick him up-