ஆராத்யா ஆனந்த்   (ஆனந்த்)
97 Followers · 155 Following

ஆனந்த்
Joined 6 May 2021


ஆனந்த்
Joined 6 May 2021

ஒத்திகை பார்க்கிறேன்
ஒரு முறைக்கு
ஓராயிரம் முறை
அப்படியிருந்தும்
தொலைந்து போகிறது
உன்னை கண்டதும்
ஏனோ இந்த வார்த்தைகள்....

-



அடையாளம் காட்டாமல்
செய்யும் உதவியும்
கொடுக்கும் அன்பும் ஆதரவும்
உயிரினும் மேலானது....

-



உருகி உருகி
நேசித்த அன்பு தான்
இன்று வரி(லி)களில்...

-



நெருங்கி நீ
அணைக்கையில்
எல்லாம்
இரக்கமின்றி
கொஞ்ச கேட்குது
என்னிதழ் உன்னிதழ்
முத்தங்களை....

-



இனிய தமிழ்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....
வாழ்க நலமுடன் வளமுடன்....

-



போதுமென்ற
வலிக்குள்
புதைந்து கிடக்கிறது
மக்காத
இவளாசைகள்...

-



அவள் ஒற்றை
பார்வைக்கு
தவம் கிடந்தவனுக்கு
அடுத்தடுத்த
ஆசைகளுக்கு
அடித்தளமிடுகிறது
இதழ் ஓர
அவள் கள்ள சிரிப்பு....

-



நம் எல்லா
துன்பத்திற்கும்
காரணமே
ஒருவர் மீது மட்டுமே
நாம் வைக்கும்
அளவில்லா
இந்த அன்பு தான்....

-



இவளுக்காக
ஓர் நொடி கூட
ஒதுக்க முடியாத
உனக்காக தான்
இவளுக்கான
ஒட்டு மொத்த
வாழ்க்கையையும்
தொலைத்து விட்டு
உனக்காகவே
இவள் வாழ்கிறாள்....

-



அழுது
புரண்டாலும்
மாண்டவர்
உயிர் திரும்பாது
அப்படி தான்
இந்த காதலும்....

-


Fetching ஆராத்யா ஆனந்த் Quotes