ஏதோவொன்று தொலைந்து
ஏதோவொன்று கிடைத்து
ஏகமாய் இலேசாகி
வாகனத்தை விட்டு
வானத்தில் பறந்து
அனைத்தும் மறந்து
சோகநிழலைத் துறந்து
தரை தொடும்
பயணம் ஏகாந்தம்
-
(👣பா.சிவகுமார்)
19 Followers · 42 Following
Joined 13 February 2022
மழை ஓய்ந்தபின்
வாசற்படியருகே
இரு நத்தைகளின்
ஊர்வலம்
இரசித்து முடித்து
ஈருருளிளை
உள்ளே விடும்போது
இதன்மேல் ஏற்றாமல்
விட வேண்டும் என்பதை
மனதில் ஏற்றிக்கொண்டு
வீட்டினுள் சென்று
சமூகவலைத்தளங்களில்
மூழ்கியவனின்
நினைவு திரும்ப
நடைபயிற்சி செய்ய
காலணியை அணிந்து
வேகமாக வாசலைக்
கடக்கையில்
'நச்' என்ற சத்தம்
காலடியில் நசுங்கி
கிடந்தது ஒரு நத்தை
ஐயோ கொன்று விட்டேனே
என்ற குற்றவுணர்வு
கொன்றெடுக்க
நடைபயிற்சி முடிந்து
மீண்டும் வாசல் தொடுகையில்
இறந்த நந்தையை
தொட்டுப் பார்த்தவாறு
இன்னொரு நத்தை
தடதடக்கின்றன
வேகமாக ஓடிய கால்கள்
-