ஆசை பெருகிடவே
அனைத்தும் பெருகிடுதே
தூரமும் - விழியின் ஈரமும்...
விட்டுவிலக நினைத்த மனம்
சத்தமின்றி சாதித்தது போல் -
உயிரிருக்க உடன்தேடும் - ஒன்றை...-
(துரை ராஜா)
2 Followers · 4 Following
Joined 16 June 2021
உலகம் போற்ற பலர் நினைவில் நிலைத்த உக்கிரபாண்டியின் உதிரமே...
வீரத்தின் விளைநிலமாக
பாசத்தால் பால் நிலவாக
மனித குலத்திற்கு மகிமை சேர்த்த புனிதமே...
அன்பாலே அகிலம் வென்றாய்,
ஆற்றலாலே ஆங்கிலேயன் வென்றாய்,
அனைவருமே ஒன்று என்றாய்,
எளிமையான பண்பு கொண்டாய்,
எதிர்த்து வந்தால் எமனாய் நின்றாய்,
உன் வழி வாழ்ந்திட உலகமே உயருமே,
எதிரியின் நிலைமையை எட்டுத்திக்கும் அறியுமே...
உன் பெயர் பாதியை என் உயிர் சுமந்திட,
நடுப் பெயர் என் குணம் உலகினில் உரைத்திட,
வழிபடும் இறைவனாக உந்தன் இயற்பெயர் முடிந்திட,
வாழும் வாழ்வின் நொடிகள் வரம்,
உனை வணங்கி மகிழும் எங்கள் கரம்...
தேவர் ஜெயந்தி வாழ்த்துக்கள்...
- துரை ராஜா...-