எழுத்துக்கள்
.....................
எழுதுங்கள்
(வரிகள் கீழே)— % &-
அதிபதி இவள்
ஆயிரமாயிரம்
இனிமையான மனதை
ஈர்க்கும் கவிகளுக்கெல்லாம்..
உள்ளத்தில் கொண்ட அழகும்
ஊக்கமும் ஒளிவீசும் இவளின்
என்னவனுக்காய் என்றென்றும் பேரன்பாக..
ஏட்டில் பதியும் யாவும் சென்று
ஐக்கியமாகிறது இவளின் தீராக்காதல் என..
ஒன்றா இரண்டா இவளின் கவிபற்றி சொல்லிவிட..
ஓவியமாய் கதை சொல்லுமே இவள்
படைத்ததின் அன்பினை..
ஔடதமும் தந்திடுவாள் தம் தத்துவமொழிதனில்..-
அதிசயம் அவள்
ஆச்சர்யம் அவள்
இனிமை அவள்
ஈகையாளி அவள்
உயிர் அவள்
ஊதை அவள்
எழில் அவள்
ஏட்டில் ஏறியவள்
ஐஸ்வரம் அவள்
ஒவியம் அவள்
ஓகை அவள்
ஒளதசியம் அவள்
என்னவளே அவள்!
-
அதீத அன்பினால்
ஆழமென புகுந்து
இதயமதில்
ஈரமாய் தங்கிய
உறவுக்காய்
ஊஞ்சலாடியது மனம்
எதிர்பாராமல் வந்தது
ஏமாற்றமாகும் அதை ஏற்க
ஐயனவன் அனைத்துமறிந்த
ஒருவனாய் நின்று தன்செயலால்
ஓங்கியுயரும் வாழ்வினை அமைத்து
ஔடதம் அளித்துடுவான்
நீ அஃதை எண்ணி
கவலை கொள்ளாதே
எந்தன் தோழியே !!💞
-
அனைத்துமறிந்த
ஆதியென தொட்டு
இனிமையாய் பலவுரை
ஈன்று வழிநடத்தி
உறவாய் நின்று
ஊக்கமளித்தவர்
எவ்வகை நஞ்சோ விழ
ஏதொன்று செவிவழிகேட்டு
ஐயம் கொண்டு மெய்யறிய
ஒருவகையிலும் முயன்றிடாமல்
ஓங்கியடித்திட நெஞ்சில்பட்ட
ஔடதமும் நஞ்சாகிபோனதே..-