அது எப்படி
இவர் கதை, கவிதை
கட்டுரை என
எதை படித்தாலும்
இவரின் குரல்
பின்னணியில்
ஒலிக்கின்றது...-
வியந்து பார்க்கும் வைகை அணையின்
மிதந்து வரும் அலைகளோடு என்றேனும்
ஒருநாள் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும்
வைரமுத்து சொல்லாமல் விட்ட கள்ளிக்காட்டு இதிகாசத்தையும் சேர்த்து !-
ஒரு கிராமத்தான்
"இது ஒரு பொன்மாலை
பொழுது" என கிறுக்க
தொடங்கினார்..!
40 ஆண்டு காலமாக
தமிழ் சினிமா மயங்கி
கிடக்கிறது அந்த தமிழ்
கிறுக்கனிடம்...!
அவர் கிறுக்களுக்கு
"தேசிய விருதே"
ஆறுமுறை அந்த கிறுக்கரை
அலங்கரித்தது...!
தமிழ்தாய்க்கு முத்தான
பிள்ளை
வைரமுத்து ...!
அகவை திருநாள் வாழ்த்துகள்
💞க.கொ.மணிவேல்...🖋️-
முதல் வாசிப்பில் இத்தேசத்தில்
சொட்டிக் கொண்டிருந்த
காதல் ரசத்தை மட்டுமே
என்னால் பருக முடிந்தது.
இரண்டாம் வாசிப்பின் போது
எனக்குள் கொஞ்சம் சோகம் நிறைந்திருந்ததால்
மீனவர்களின் இன்னல் வாழ்வை
உணர முடிந்தது.
மூன்றாம் வாசிப்பில் தான்
இதற்குள் அழகாக கலக்கப்பட்டிருக்கும்
அறிவியல் உண்மைகளை
ஆராய முடிந்தது.
நான்காம் வாசிப்பில்
இத்தேசத்திலிருந்து என்ன
அலை அடிக்கப் போகிறது
என்ற ஆவலில் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.
-
"கவிதையெனும் பெயர் காற்றுதன்னில்
உலாவும் காலம் வரை,
காதலும் மொழியும் இசையும்
உலகில் வாழும் வரை,
உன்னையும் உன் கவிகளையும்
பாரில் மறப்போர் எவருமில்லை..."
-
ஒண்ணா,ரெண்டா அத
சொல்லுக்குள்ள அடக்கிப்புட.
சொன்னாலும் ஓயாத கத,எழுந்து
நின்னு எட்டி மிதிச்சி எத்தனையோ
பார்த்துப்புட்டு,அமைதியா கடந்துபோன
உன் முன்னாடி எத்தன தான் சொன்னாலும்,
ஏதவாது சமானமாவுமா.நீ நடந்த பாதையில தெனம்
நடந்து நான் போகையில அத ஊரு பார்த்துச்சொல்லும் தாயி,
அப்ப உன் கண்ணுல வர சில்லுத்தண்ணி,
ஆயிரம் வரிய எழுதிப்புட்டுப்போகும் தாயி.
ஏடொன்னும் தூக்காம எழுத்தொன்னுமே
படிக்காம எப்போதும் மனச படிச்ச மாதவம்,
மங்கையெனும் அன்னையாம். கோபுரங்களின்
மறைந்து நிற்கும் அடித்தளங்களுக்கு சமர்ப்பணம்.-
கருவறையில் இடம் தந்தாய்
கலைகளையும் கற்று தந்தாய்
கண் இமை போல் காத்து நின்றாய்
காலம் முழுதும் காத்து கொண்டாய்
காவியம் காட்டி கருத்து தந்தாய்
தேவை அறிந்து அமுது தந்தாய்
பாவை நீ உன் தேவைகளை மறந்து
தினமும் தியாகம் செய்தே விவரம் தந்தாய்
தருணங்களில் தன்னை மறந்தே சேய்களுக்கு
செவிலி ஆனாய்
செப்பன செய்தே சிந்தை
மகிழ்ந்தாய்
அன்னையே உந்தன்
நினைவாக சுவாசம்
செய்கிறேன்-