காத்திருப்பது கூட ஒரு வகை தவம் தான் ,
கடைசியில் கிடைக்கப் போவது வரமாக இருப்பதால்-
_அவள் அவன்_
கனவுகளில் மட்டுமே தன் காவியத் தலைவனை கண்டு கொண்டிருக்கும் அவளின் எண்ண ஓட்டங்கள்
தன்னவனை முதன்முறை கண்களின் எதிரே காண நேர்கையில்
இதய துடிப்புகள் இரட்டிப்பாக - அவ்விடம் இசைத்தது ண்ணங்களின் எதிரொளிப்பு.-
நீச்சல் தெரியாமல் நீரில்
தவறி விழுந்து தத்தளித்த
தருணத்தில் தங்களை தற்காத்துக் கொள்ள துடுப்பாகும் கைகளில் தளிரும்
தன்னம்பிக்கை போன்றதுதான்.
@ennangalin_pathivugal-
வெறிச்சோடிய வான்வெளியில்
வெகுநேரமாக காத்திருந்தது விண்மீன்✨
வெளிச்சம் தரும் உன் வதனம் வேண்டி
வெண்மதியே! 🌝
_அமாவாசை இரவு_
✒ennangalin_pathivugal✍-
மௌனத்தின் மொழியில் யவ்வனப் புன்னகையே பதிலாய் வீற்றிருக்கும்
'உடன்பிறவா சகோதர' உறவிற்கு
அருமை தங்கையின்😍 அகவை தின அன்பு வாழ்த்துக்கள் 💚
_சான்றோர் சபை நாயகன்_-
அக்னி நட்சத்திரம் ஆரம்பமாம் !
அலுத்து கொண்ட அவளுக்காகவே
அடித்து பெய்கிறது அடைமழை🌧
_கோடைகால மேகங்கள்_
@ennangalin_pathivugal-
மாற்றமா ? ஏமாற்றமா என்று
மறு சாரார் கருதியிருக்க
மீண்டும் சந்திப்போமா? என
ஒரு சாரார் காத்திருக்க
அனல் பறக்கும் - தொகுதிகளில்
தேர்தல் எனும் தேர்வு முடிவுகள்
தேர்ந்தெடுக்கிறது வெற்றி வேட்பாளர்களை...
_மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு_
@ennangalin_pathivugal-
நமக்கு வரணும்னு இருக்கிறது
வந்து சேராமல் இருக்காது,
நம்மிடம் வரக்கூடாதுன்னு இருக்கிறது வரமே கிடைச்சாலும் கிடைக்காது.
_Accept and Move on_
Follow on instagram
@ennangalin_pathivugal-
தவறிய அழைப்புகளை தினம்
தவறாமல் சரி பார்க்கிறேன் - நீ
தவறுதலாக அழுத்திய 'எண்'
தனதாக ('எனதாக') கூடாதா என்று
தவிக்கும் என் எண்ணங்களை - தடுத்து
தண்டனையென தாங்கிக்கொள்கிறேன்
தவிர்க்க முடியாத சிலகாரணத்தினால்......
_தொடர்பு எல்லைக்கு வெளியே_
@ennangalin_pathivugal_-
போலியான புன்னகையின் முகவரியில்
பொழுதுபோக்காக பூக்கும் உறவுகள் - பார்த்த சில நாட்களில்
பட்டுப் பூச்சிகளாய் மனதை வட்டமிடும்;
பழகப் பழக பல வர்ணம்
பூசிய வானவில்லாகவே தோன்றும்.
படிப்படியாக புரிந்து விடும் இதில்
பல(ர்) நிறம் மாறும் பச்சோந்தி யென்று...
_வாழ்க்கை வெவ்வேறு வேடங்களில்_
©ennangalin_pathivugal
-