Ethics First. Epics Follows. {Or} Learn Ethics. Earn Epics.
-
ஊருக்கு மட்டுமே உபதேசம் செய்யும் ஊரில் உன்னையும், உன் உழைப்பையும் மட்டும் நம்பு.
-
இரண்டு பக்கம் இருந்தால் தான் நாணயம். இருண்ட பக்கம் இருந்தால் தான் மனிதன்.
-
இருக்கும்போது இறப்பதில்லை என்று இருக்கிறார்கள். இறக்கும்போது இருப்பதெல்லாம் இல்லை என்று அறிகிறார்கள். இருப்பதைவிட இறப்பதே நிரந்தரம். இருக்கும்போது இதை மறந்திடுறோம்.
-
தொலைக்காட்சியில் நேரடியாகத் திரைப்படங்களை வெளியீடு செய்யும் எண்ணத்தை தொலைநோக்குப் பார்வையில் கண்ட விஸ்வரூபமே! நீர் கண்ட கனவினை உங்கள் கண் முன்னே நிறைவேற்றியது காலம். வாழ்க பல்லாண்டு, தமிழ் சினிமா செழிக்க.
-
வழியைத் தந்துவிட்டு வாழ்த்துபவர்களிடம் நன்றியுடன் இரு. வலியைத் தந்துவிட்டு வாழ்த்துபவர்களிடம் நம்பிக்கையுடன் இரு. வலி பிறந்தால் வழி பிறக்கும்.
-