சுமப்பது எல்லாம் வலியல்ல,
அதில் சுகமும் உண்டு!
இன்பத்தை சுமக்கும் நெஞ்சம் துன்பத்தை சுமக்கும் போது, மேலும் வலுவாகி வாழ்வை தன்னம்பிக்கையுடன் வாழ கற்பிக்கிறது!
வலுவான நெஞ்சம் வலமாக வாழ சுமையையும் சுகமாக ஏறுக்கொள்!
-இரா.கார்த்திகா-
அவள் அழகோ அருவி போல் பொழியக் கண்டேன்!
அதிகாலை சூரியன் அவளிடம் நாணி மறையக் கண்டேன்!
கார்மேகமாய் அவள் கூந்தல் கண்டேன்!
கார்மேகத்தை தீண்டிடும் நிலவென நான் மாறிட,
அவளிடம் நான் என்னைக் கண்டேன்!
- இரா.கார்த்திகா
-
உன் மனதின் ஆழம் ஆழ்கடலின் நீலம் இவ்விரண்டும் அறிந்தவன் இவ்வலகில் உண்டோ!
மெல்லிசையாய் என் மனதில் நுழைந்தாய்
பாதியில் மறந்த பாடல் வரி போல்
பாவையும் என்னை மறந்ததும் ஏனோ?
- இரா.கார்த்திகா
-
நிலவின் துகள்களில் வீசும் ஒளியாய் உன்னைக் கண்டேன்! நீ புன்னகை வீச உன் பொன்னகை நாணும்! என் ஜென்மம் தீர சற்றே நீயும் மெல்லிய சிரிப்பால் சிறைபிடி கண்மணி!
-
உன் கண்கள் சொல்லும் கதைகள் போதும் மைவிழி பொழியும் மொழிகளிலே பல காவியங்கள் தோன்றும் யுகத்தினிலே! ஜகத்தினில் உன்னை படைத்தவனே வியந்துனைப் பார்த்தான் விண்ணுலகிலே!
-
பெண் மயில் ஒன்று மையல் கொண்டு தன் மைவிழியால் கவர்ந்தது! மயங்கிய வர்ணன் மழையென பொழிந்தான்.
- இரா.கார்த்திகா
-
No matter what, don't mind other's words. Be true to your soul!
-
உயிரினில் உயிரை விதைத்தாய்
அழகிய மலர் என்னை படைத்தாய்
உன் கருவறை வாசம் போதும்
அதில் உறங்கிய நாட்கள் வேண்டும்
என் அசைவினில் ஆசை பெற்றாய்
அனுதினம் ஆவல் கொண்டாய்
உன்னை உதைக்கையில் என் வலிமை கண்டேன்
வெளிவர வழியென வியந்தேன்
உன் தசையினை தின்று நான் முளைத்தேன்
அது வலியல்ல வரம் என்று மகிழ்ந்தாய்!
மழலையின் மொழிகளில் மலர்ந்தாய்!
- இரா.கார்த்திகா
-
கவிபாடும் நிலவே
என்னைத் தேடி வந்த உறவே
இருள் நீக்க வந்த ஒளியே
மனதோரம் வந்த வலியே
நீ இல்லாமல் நான் தனியே
தவித்தேனே கண்மணியே
விடைத்தேடி வருவாயோ வென்பனியே!
-இரா.கார்த்திகா-
கரைந்தோடும் இரவுகள்
கவிபாடும் நினைவுகள்
விழியோர கவிதைகள்
நெடுநேர தவிப்புகள்
தினம் தோன்றும் கனவுகள்
அசைந்தாடும் மேகங்கள்
இசைப்பாடும் மூங்கில்கள்
உன் விசை ஈர்த்து
என் மனம் திசை மாற
புரியாத புதிர் போல உன் பார்வை படறிய நேரங்கள்
காலத்தை வென்றேனை கொன்றதை பாரடி!
- இரா.கார்த்திகா
-