அன்பு ஏனோ கோடை மழை போலவே வருகிறது
எதிர்பாராத நேரத்தில் ,
எதிர்பாராத இடங்களில் ,
எதிர்பாராத மனிதர்களிடமிருந்து ,
எண்ணிப்பார்க்காத வகையில் ,
அடடா என்று -
கை நீட்டி அள்ளி அனுபவிப்பதற்குள் ,
கண நேரத்தில் அடித்து ஓய்ந்து முடிகிறது...
ஏய் அன்பே ,
அடுத்த முறையாவது
சொல்லிவிட்டு வா ...
-
பல மணி நேரம்
அழியாத கண் மை
வேண்டும் என்று தேடுகிறாய்.
புரியவில்லை எனக்கு...
ஒருவேளை
உன் கண் பேசும்
கதைகளுக்கு
உன் தடித்த கண் மை
தான் திரைச்சீலைகளோ
ரகசியங்களை பேசாத உதடுகள்,
உணர்வுகளை மறைக்கும் கண்கள்.
புதிர்...நீ.-
தாயின் அன்பைப் போல் ,
நாம் அதை குடையால் தடுத்தாலும் ,
ஏதோ ஒரு வழியில் நம்மை நனைத்து விடும் - மழை ♥️-
Noone is an expert about life.
It’s just their experience and what they have found.
So you too find your experience based on what you want.-
வெண் பட்டின் சலசலப்பும் ,
மின்னும் கொடை ஜிமிக்கியும் ,
மணக்கும் மல்லிகையும் ,
கொஞ்சும் கொலுசொலியும் ,
கவர்ந்திழுக்கும் புன் சிரிப்பும் ,
உன் புகைப்படம் தாண்டி
என்னை இழுக்குதடி ,
திருவோணம் பண்டிகையாம்
இந்நாளில் ,
என் இதயம் முழுதும்
உன்னால் பூக்கோலமாடி ...-
புதிய தொடக்கம் -
புத்துணர்ச்சியோடு தொடங்கட்டும் ,
தீயவை அழியட்டும் ,
தர்மம் தழைக்கட்டும் ,
அறம் நிலைக்கட்டும் ,
உழைப்பு பெருகட்டும் ,
மனம் நிறையட்டும் ,
வளர்ச்சி கிட்டட்டும்,
மகிழ்ச்சி பொங்கட்டும்.
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏🏻
-
Dear women,
It’s not just today you stay together or wish each other.
I wish daily,
- you stay supportive to each other
- you motivate each other
- you think other woman is beautiful
- you stand for truth and stay united
- you give equal rights to your fellow woman
Happy women’s day !-
When people gossip about you at your back,
Just give them what they deserve.
A HUGE LONG STINKY FART.-
பதிக்கும் முத்தத்தை அழிப்பதில் தொடங்கி ,
அடுத்தவருக்கு கொடுத்த பறக்கும் முத்தத்தை
எட்டி பறிப்பதில் முடிகிறது -
குழந்தைகளின் செல்லமான கோபம் ....-