அழுகைக்குள்ளே
அழிகிறது
பெண்மையின் கனவுகள்..!-
✔கண்ணீர் துளிகளின் காதலி.
✔ஓவியத்தின் மீது கொஞ்சம் காதல்.
✔மாற்றத்தை விரும்புபவள... read more
காகித இதயமாக இருந்தாலும்
குருதி பாயும் இதயமாக இருந்தாலும்
எண்ண ஓட்டங்கள்
சரியாக இருந்தால் தான்
துடிப்பின் காலம் நீளும்...!!
-
வாழ்க்கை ஒரு எதிரொலிப்பு விதி;
நாம் பிறருக்கு என்ன செய்கிறோமோ
அதுவே நமக்கும் நடக்கும்!!!
-
ஒருவரிடமிருந்து எதையாவது
எதிர்பார்த்து கொண்டே இருந்தால்
மண்ணில் உறங்கும் வரை
ஏமாளியாக தான் வாழ வேண்டும்..!!
-
சுட்டெரிக்கும் சூரியனாக இருந்தாலும்
நேரமும்
வார்த்தையும் தவறினால்
தரையை காதலிக்கும்
காலணி கூட
உன்னை மதிக்காது!!
-
முயற்சியின் கற்களில்
தோல்வியின் உளி படாமல்
வெற்றி சிற்பங்கள்
ஒருபோதும்
செதுக்கப்படுவதில்லை..!!
-
எளிமையான தோற்றம்,
எளிமையான எழுத்து நடை..
இனிமையான குரல்,
அழகான சொல் உச்சரிப்பு...
பொறுமையின் படிக்கல்,
அறிவுரை ஆசான்...
நான் எழுதிய புத்தகத்தின் வழிகாட்டி,
என்னை கதை எழுத தூண்டிய கதையாசிரியர்...
கதையில்
சிந்தனையின் சிறப்பிடம்,
கவிதையில்
எளிமையான வார்த்தைகளால்
மற்றவர்களை சிந்திக்க வைக்கும்
சிந்தனைச் சிற்பி.....
இத்தளத்தில்
நான் அண்ணா என்று அழைத்த முதல் உறவு,
எனது வரிகளுக்கு அவ்வப்போது வழிகாட்டும்
எனது வழிகாட்டி....
எனது திறமைகளை
பாராட்டும் பாராட்டு கவிஞன்!!!!!
உங்களுக்கு
எனது அன்பான
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா......!!!!🎂🎂🎂🌹🌹🌹🌹🌹❤❤❤-
உன் விரல்
இருதயத்தில்
என்னை
ஓவியமாக
வரைந்தாய்;
நான்
என் இருவிழிகளில்
உன்னை
ஒரு ஓவியமாக
மட்டும் இல்லாமல்
சிற்பமாயும் செதுக்கி
வைத்திருக்கிறேன்...!!!!-
வாழ்க்கை நதியில் வரும்
மேடு பள்ளங்களை
நற்பண்புகளாலும்
நற்குணங்களாலும்
நிரம்பிச் செல்லுங்கள்...!!
-