திருத்தி திருத்தி எழுத ஆசைதான்
ஆனால் எனக்கு அழகான கவிதையை விட
அர்த்தமற்ற கவிதையே பிடித்திருக்கிறது...-
தமிழன்டா😎
இன்னும் நிறைய கவிதைகளுக்கு பின் தொடரவும்...
உங்கள் பாராட்டுகளே என்... read more
பல கிறுக்கல்களுக்கு பிறகு
ஒரு கவிதை பிறந்தது உனக்கும் எனக்கும்!-
நிலா சற்று நீளமாக வளர்ந்து வருக்கிறது
பூமி தட்டையாக கிடக்கிறது
பிரபஞ்சத்துக்கு இரண்டு கை முளைத்தாடுகிறது
வானமெங்கும் பச்சை நிற போர்வை படர்க்கிறது
மரமெல்லாம் நீல வர்ணம் அடித்தாடுகிறது காற்றில்
என் ரத்தத்தில் உறைந்த பனிக்கட்டி
உன் ரத்தத்தில் காட்டு தீ
மொத்ததில் உன் முத்தத்தின்
பித்த நிலை இது...-
எப்போதோ எங்கேயோ எல்லா சூழ்நிலைக்காகவும் எல்லா மனிதர்களுக்காகவும் ஒரு தத்துவம் சொல்லப்பட்டு விட்டது
உனக்கான தத்துவத்தை நீதான்
கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும்
நீ தேட முயன்றாலே
அது உன் கண்ணில் பட்டும் விடும்-
மென்பொருள் எழுதிக் கொண்டிருந்த என்னை
கவிதை எழுத வைத்தாய்
பின் கவிதைக்கு பொருள் தேட வைத்தாய்
பின் கிறுக்க வைத்தாய்
இறுதியில் கிறுக்கன் ஆக்கினாய்!-
தென்னை மரங்கள் மட்டும் எப்படி
கூட்ட கூட்டமாக வளர்கிறது
என்று ஆச்சரியப்பட்டு கொண்டேன் சிறுவயதில்
அது பண்ணை...
வைத்ததும், வளர்த்ததும், வெட்டுவதும் மனிதன் என்று அறிந்துக்கொண்டேன்
பின் நாளில் நான் கண்ட பல
ஆச்சரியங்களும் என் கண்களில் இப்போது படுவதில்லை...
-
அவள் நெற்றியில் மென்காதலாய்
இறங்கிய என் முத்தங்கள்
அவள் பாதங்களில் அடர்ந்த காமமாய் முடிவுற்றது-
உங்கள் கனவை வெற்று காகிதங்களில் நிரப்புங்கள்
ஏற்கனவே நிரப்பிய காகிதத்தின்
மீது எழுத நினைத்தால்
காகிதத்தோடு கனவுகளும் கசக்கப்படும்
-
சுயம்
எல்லோரும் வாழ்கிறார்கள்
ஒரு வாழ்க்கை என்பதற்காக
நானும் வாழ்கிறேன் ஓர் வாழ்க்கை
நிழல்போல்-
தனிமை
நாம் விரும்பி சென்றடைந்தால்
இனிமை
நம்மை விரும்பி வந்தடைந்தால்
சுமை-