B J   (Beulah Jasmine)
66 Followers · 1 Following

Joined 16 April 2019


Joined 16 April 2019
15 MAR AT 22:17

தேவதை!!!

காலையில் பேருந்தில் இருக்கும் நெரிசலில் இருக்க இடம் கிடைப்பது அதிர்ஷ்டமே...

பிள்ள இதுல இரு...என்ற குரல்... திரும்பி பார்த்தால்... அவள்!!!

காதை கிழித்த காதணி
கையில் வளையல்
ஒல்லியான தோற்றம்
நான்கடி கூந்தலை சுற்றிய கொண்டை
இடுப்பில் ஒரு பணப்பை
கழுத்தில் ஒரு மாலை
இதற்க்கு முன்னால் பார்க்காத முகம்
எனினும் பல ஆண்டுகள் பழகியது போன்ற உரிமையான பேச்சு
நேரம் போனது தெரியாத ஒரு பயணம்...

அவளுக்கு 98 வயது
தன பேத்தியின் மகளை பார்க்க மகிழ்ச்சியோடு பயணித்த அவள் கண்களில் ஏதோ ஒரு நிறைவான உணர்வு...
இன்னும் 100 ஆண்டுகள் வாழ தயார் என்ற மனவலிமை...

98 ஆண்டுகள் ஆன பிறகும் அவள் முகத்தில் களைப்பு தெரியவில்லை.
மலர்ந்த முகத்தில்
நிறைவான மனம் கொண்ட
தேவதை அவள்!!!

-


15 MAR AT 21:42

இன்பம்!!!!


முழு நம்பிக்கை கலந்த உரிமை....
எதையும் யோசிக்காமல் பேசும் சுதந்திரம்...
முகத்திற்கு பின்னாலும் உண்மை...
முக்கியம் என்ற உணர்வு...
எதுவும் சாதிக்கலாம் என்ற உத்வேகம்...
நாம் என்ற எண்ணம்...

எல்லாம் கலந்த பாசத்தில் இணைந்த மனதிற்கு இன்பத்திற்கு ஏது குறை!!!

-


15 MAR AT 21:25

குறை!!!

அன்று காலை 5 மணி அலாரம் அடிக்க படுக்கையிலிருந்த எழ முயற்சித்த அவளுக்கு திடீரென்று தலை சுற்றுவது போன்ற உணர்வு..

இரவு உணவு சாப்பிடாமல் காய்ச்சல் மாத்திரை சாப்பிட்டதன் விளைவு என்று புரியவே திரும்பவும் படுக்கையிலே படுத்து விட்டாள்.

இரண்டு மணி நேர தூக்கம்...
ஏதோ தெம்பு வந்த உணர்வு...
அலுவலகத்திற்கு போக தயாராக வேண்டும்...
வேகமாக எழுந்து சமையலறை சென்று உணவை சமைத்து விட்டு அலுவலகத்திற்கு சென்றாள்.

இரவு காய்ச்சல்... காலை தலைசுற்றல்...
விடுப்பு எடுக்க தோன்றவில்லை.

பிள்ளைக்கு காய்ச்சல்... கஞ்சி வைத்து கொடுக்கும் அம்மாவின் பாசமும்...
தலை சுற்றுகிறதா?.. உடனே மருத்துவமனைக்கு செல்லுவோம்... என்று பதறும் அப்பாவின் பாசமும்.. கடவுளின் வரமானாலும்....

விடுப்பு எடுக்காமல் பலசாலியாக பயணிக்கும் வரம்,
இறைவனே தாயும் தந்தையாக இருக்கும் சிலருக்கே அமைகிறது.

எதுவும் குறை இல்லை
எண்ணங்கள் கறைபடாமல் இருந்தால்!!!!

-


2 MAR AT 21:40

Every drop of silenced tears
Added manure to my emotional strength

Every moment of forgiveness
Molded me as a person

-


19 DEC 2023 AT 13:15

உன் எண்ணம் தான் உன் முதல் நண்பன்

உயர்ந்த எண்ணம் கொண்டவருக்கு தனிமையும் இனிமையே

-


27 APR 2023 AT 17:52

Observe before you act
Listen before you speak

Learn before you teach
Analyse before you Judge

Love before you hate
Live before you die

-


4 APR 2023 AT 8:27




திருப்பாடல்கள் 15


ஆண்டவரே,

😇உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்?
😇உம் திருமலையில் குடியிருப்பவர் யார்?

✍️மாசற்றவராய் நடப்பவர்
✍️நேரியவற்றைச் செய்பவர்
✍️உளமார உண்மை பேசுபவர்
✍️தம் நாவினால் புறங்கூறாதவர்
✍️தம் தோழருக்குத் தீங்கிழையாதவர்
✍️தம் அடுத்தவரைப் பழித்துரையாதவர்
✍️நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுபவர்
✍️ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பவர்
✍️தமக்குத் துன்பம் வந்தாலும், கொடுத்த வாக்குறுதியை மீறாதவர்
✍️தம் பணத்தை வட்டிக்குக் கொடாதவர்
✍️மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறாதவர்

👉இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர்







-


25 NOV 2022 AT 20:09

When God seeded a chinese bamboo seed
Everyone looked that seed as a failure
Many forgot that seed
5 Years rolled, no growth
Suddenly came out
Showed the fastest 1m growth everyday
Became the 100 feet tallest tree in just 6 months
Everyone looked up at its growth
None reached its height

Be patient
God has a purpose for your life
Work on yourself
Great things take time

-


14 NOV 2022 AT 7:49

Love is not bound to something
It's a feel
We all say, we love God
How many of us have seen God
How many of us have communicated with God in person
How many of us in mobile contact with God
How many of us make call to God and ask his daily plans
How many of us enquire God about his daily activities
How many of us were friends with God in God's social media accounts

But we all say, We love God & God loves us
That's love, it's a feeling.
The more you feel it, the more you feel their presence with you
whether they are alive or dead or supernatural.

If you knew the true meaning of love
It never hurts
You never need a body or structure or voice or response to love.
Love is a feel
Let it flow and enjoy life.
Love everything around you

-


11 NOV 2022 AT 6:45

எவ்வளவு கோடி சம்பாதித்தாலும்
உன் ஓய்வறை ஆறடி கல்லறை தான்
எத்தனை உறவுகள் சம்பாதித்தாலும்
உன் ஒய்வு தனிமையில் தான்

உனக்கு முன் பலர் வாழ்ந்து மடிந்து விட்டனர்
உனக்கு பின்னும் பலர் வர காத்திருக்கின்றனர்

இங்கு எதுவும் உனக்கு சொந்தமில்லை, உன் உயிர் கூட
கடவுள் கொடுத்த உயிரை அவனே எடுத்து கொள்வான்

வரும் போது எதையும் கொண்டு வரவில்லை
போகும் போது எதையும் கொண்டுசெல்வதும் இல்லை

ஓர் உடல் ஓர் உயிர்
ஒரு பானை உணவும்
ஒரு குவளை நீரும்
ஒரு நாள் தேவை

ஏன் இந்த அவசரம்
எங்கே செல்கிறாய்
ஆறடி கல்லறையில் ஓய்வெடுக்க
இவ்வளவு ஆர்வமா

வேகம் குறைத்து
வாழ்க்கையை கொஞ்சம் வாழ்ந்து செல்

-


Fetching B J Quotes