உலகமே நானென்று கர்வபடாதே....
உலகத்தில் நீயும் சிறுதுளி...!
உனக்காகவும் காற்று நிரம்பியுள்ளது
காற்றெல்லாம் உனதில்லை...!-
வார்த்தைகளில் விளையாடுபவள்
இலக்கியங்களில் இளைப்பாருபவள்
நம்பிக்கையை ஊட்டுபவள்
ம... read more
என் எதிர்பார்ப்புகளை
எல்லாம் பூர்த்தி செய்ய
காத்துக்கிடக்கும்
அற்புத விளக்கின் பூதமாய்
நீ......
இருந்தும் ஏங்குகிறேன்;
கேட்டு பெறுவதை விட
நீ என்னை புரிந்து
தந்துவிடமாட்டாயா? யென்று
என்ன செய்வது
பூதத்தால்;
கேட்க்கும் வரமே
தர இயலும்.....
எப்படியோ வரம் கிடைத்தால்
சரி என்றாகி விட தான்
புத்தி சொல்கிறது
மனம் எங்கே கேட்கிறது.-
இருந்தும் வருத்தத்தால்
மௌனம் கலையா
இரவை;
ஒருபோதும் கடந்துவிடாதீர்கள்
பின்பு அதுவே
பழகிவிடும்....-
ஏக்கம் நிறைந்த
வாழ்க்கை இது...!
சுடர் ஏற்றுபவருக்காக
காத்திருந்து
விளக்கு திரியென
திரியாதே...!
உன்னுள் இருக்கும்
சிக்கி முக்கி கல்லை
கண்டெடு.... வெளிச்சத்தை
கண்டிடு....!-
எதிர்பார்ப்புகள் எல்லாம்
ஏமாற்றம் ஆகிவிடுவதால்,
ஏமாற்றத்தையே எதிர்பார்க்க
துவங்கி விட்டேன்..
குறைந்த பட்சம்
ஏற்றுக் கொள்ளும்
பக்குவமாது வரக்கூடும்...!-
உலகமே நானென்று
கர்வபடாதே...
உலகத்தில் நீயும்
ஒரு சிறு துளி...!
உனக்காகவும் காற்று
நிரம்பி உள்ளது
காற்றெல்லாம் உனதில்லை....
அரியணை விரிப்பனாலும்
அடிப்பிடி துணியானாலும்
நீ வந்த தரியினை மறவாதே..!-
வாழ்க்கை பயணத்தில்
காதல் ஒரு
படகு சவாரி தான்
சுவாரசியமும்
தாராளம்
பாதைகளும்
ஏராளம்
கவனம் தப்பினால்
பாதையும்
மாறிவிட கூடும்
திருமணமோ......
இரயில் பயணம்
போல 🚉🛤️
சரியான இரயிலை
பிடித்துவிட்டால்
போதும்;
செல்ல வேண்டிய
இலக்கை
அடைந்துவிடலாம்....-
காதல்
கவசத்துடன்
மனைவியின்
சேனை யொன்று
மிஞ்சி விட்டால்
போதும்
வாழ்க்கை போரில்
வென்றிடாலம்-
கரிசனை காட்டிடு
காந்தை காத்திடு (பெண்)
கிளைமை வளர்த்திடு (உறவு)
கீழ்மை வெறுத்திடு (இழிவான)
குளுவை ஒழித்திடு (வறுமை)
கூழைமை செய்திடு (கடமை)
கெழுதகை கேட்டிடு (உரிமை)
கேளிக்கை குறைத்திடு
கைம்மை போக்கிடு (அறியாமை)
கொடுமை அழித்திடு
கோள் தவிர்த்திட (புறம்கூறுதல்)
கௌப்பு வந்து சேரும் (புகழ்)-
வெகு சிலருக்கே இருக்கும்
அரிதான நற்குணங்களை
கொண்டவர்களின்
நிறைகளை சொல்லி சொல்லி
மெய் சிலிர்க்காவிட்டாலும்
அவர்களின் சிறு சிறு
குறைகளை
வாய்ப்பு கிடைக்கும்
பொழுதெல்லாம்
குத்திக் காட்டாதீர்கள்...
-