Ratheeshkumar AyyamPerumal   (ஏடில்லா எழுத்துக்கள்)
13 Followers · 8 Following

வாருங்கள் என் ஏடில்லா எழுத்துகளைக் காண ❣️
Joined 13 June 2019


வாருங்கள் என் ஏடில்லா எழுத்துகளைக் காண ❣️
Joined 13 June 2019
27 APR 2021 AT 10:58

இக்கணம்
ஊண் கேட்கும் காெடுங் புகை காெண்டு
உள்ளம் தவிக்கும் புகழ் வேட்கை தணிப்பாய்

-


3 NOV 2020 AT 0:25

தேயும் பிறை நெஞ்சில்
தேக்கிய ஏக்கங்களை
தெளிவுற செய்திடவே
தெரிசனம் ஒன்று தாராயோ
இடையுவா ❤️

-


8 OCT 2020 AT 9:36

சுகமது கண்ட உள்ளத்தின்
சுவடேதும் இங்கு மீதமுண்டோ!!!!

சவ மாயை புசித்தும் பயன் என்ன
சாகா வரம் தான் கிட்டிடுமோ!!!!

-


28 AUG 2020 AT 8:19


சட்டை அளித்த கதகதப்பை புறந்தள்ளி
குற்றங்களும் செய்ய தூண்டிடும்
உன் கொடுங் குளிர் திரட்டி
என் மார் எங்கும் பூசிக் கொள்ளவா...

-


10 MAY 2020 AT 22:08

அத்தனையும் அருளிடும்
அதில் இன்பம் எய்திடும்
அரன் இங்கு உண்டோ
சுய நலம் விரும்பிடும்
சூட்சும உலகினில்..

பார்க்கும் முன்பே பாசமளித்து
படரும் கொடி போல் அள்ளி அணைத்து
உடல் உயிர் உருக்கி உருவமளித்து
உலக உறவுகள் சொல்லி வளர்க்கும்
அன்னை அவள் அருளிடும் அன்பு கண்டு
வெட்கி குனிந்தன வானவர் கூட்டம்.

அனைத்துமே அருளும் அவள் அதிசயம்
அகிலமே அன்னையின் அன்பு வசம் ❣️

-


9 MAY 2020 AT 1:45

பாசம் வழிந்த என் பருந்து கண்கள்
அவள் பாத சுவடு பார்த்திருக்க

வாசம் வீசும் ஒளி முகம் கொண்டு

என் வாசல் இறங்கி வரம் தந்தாள்

அந்தியில் அந்த அறுவடை நிலா❣️

-


14 APR 2020 AT 11:18

ஒரு சந்தேகம்.
தமிழ் புத்தாண்டு இன்னைக்கு சரி..
ஆனா தமிழ் ஆண்டுக்கு பெயர் ஏன் சமஸ்கிருதம்-ல இருக்கு🤔🤔🤔🤔

-


9 APR 2020 AT 19:22

உன் கொஞ்சும் குளிர் கழிக்க
என் நெஞ்சம் தேடியது தேனீர் குவளை

அந்த வஞ்சமில்லா மண் வாசனை திரவியம்
கொஞ்சம் என் மீதும் பூச யோசனை அவசியம்

வருடமெல்லாம் வனங்கள் வாட வாராமல் நின்று
இன்று எங்கள் மனங்கள் தேடாமல் வந்ததில்

வருத்தம் வீழ்ந்ததென்றாலும்

இந்த காக்கைக்கும் குருவிக்கும் (எனக்கும்)சற்றே மனநெருடல்
நீ கணநேரத்தில் ஆணையிட்ட கட்டாய குளியல் கண்டு 😄

-


3 APR 2020 AT 20:25

உழைத்து உருகியதெல்லாம் வெறும்
பிழைப்பிற்கென ஆனபின்
களைத்து போன என் கண்களின் கவனம்
எங்கே தான் போகுமோ.

-


4 MAR 2020 AT 13:36

பெண்ணை தன்னில் பாதி என வரையறுக்கும் ஆண் வர்க்கம்
அவன் ஆதி அணுவும் அவள் என் அறிக...

-


Fetching Ratheeshkumar AyyamPerumal Quotes