Madhivadhani Murugesan   (Madhivadhani)
13 Followers · 1 Following

தனிமை கிறுக்கல்களுக்கு ஓர் அங்கீகாரம் தேடி...
மனதில் பட்டதை எழுதும் மதிவதனி...
Joined 27 March 2020


தனிமை கிறுக்கல்களுக்கு ஓர் அங்கீகாரம் தேடி...
மனதில் பட்டதை எழுதும் மதிவதனி...
Joined 27 March 2020
1 FEB AT 15:15

தெரு பிள்ளையாரை
தேடிப் போகும்
தெரு நாயை
விரட்டும் அதிகாரம்
பூசாரிக்கு யார் கொடுத்தது...?

-


30 JAN AT 8:22

சிறிதும் சலனமின்றி
சருகென பிரிந்தாயே
நீயும்...
மரமென நிற்கிறேன்
நானும்...

-


16 JAN AT 19:17

I know you can't be my sky,
All I want is ,
can you be my rainbow, please ...?

-


14 DEC 2023 AT 8:28

வர மாட்டாய் நீயும்
என அடைத்து
சாத்திய கதவை
தாழிட மறந்தவளாய்
செல்கிறேன் நானும் ...

-


13 DEC 2023 AT 8:31

உன்னை விட
உன் நினைவுகளை
எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது
நீ என்னை தேட
மறுத்த போதும்
மறந்த போதும்
உன் நினைவுகள்
நான் எங்கு ஒளிந்திருந்தாலும்
தேடி கண்டு
என்னை கட்டிக்கொண்டு
விடுவதும் இல்லை
விலகுவதும் இல்லை...
உன்னை விட
உன் நினைவுகளைத் தான்
எனக்கு அதிகம் பிடித்திருக்கிறது...

-


3 DEC 2023 AT 7:24

We're two different poles.Unfortunately poles of a same magnet. So, even how hard we try we can't be together unless we broke ...

-


29 OCT 2023 AT 14:05

என் தெய்வம் அவன்
நிர்கதியில் நிர்மூலமாகி
கொண்டிருந்த என்னை
காத்தவன்
நேர்த்திக்கடனாய்
கேட்கிறான் பலியாய்
என் காதலை ...

-


20 AUG 2023 AT 19:16

மழை நீரில்
அடித்துச் செல்லப்பட்ட
ஒற்றை செருப்பென
தேடுகிறேன் உன்னை ...

-


20 AUG 2023 AT 8:02

இதற்குமேல் உடைவதற்கு ஒன்றுமேயில்லை
என்னும் அளவிற்குதான்
வந்து உடைத்துவிட்டு போகிறார்கள்
சிலர் நம் வாழ்வில்...

-


17 AUG 2023 AT 21:32

கம்யூனிச காதல்
உன்னை கண்டு சிவந்தது
என் கன்னங்கள்...
உன்னை காணாமல் சிவந்தது
என் கண்கள்...
உன்னை கொண்டு சிவக்காதோ
என் நெற்றி வகிடு ...

-


Fetching Madhivadhani Murugesan Quotes