Guru   (குரு)
0 Followers · 2 Following

Writer - தமிழ் கவி
Joined 16 March 2024


Writer - தமிழ் கவி
Joined 16 March 2024
20 HOURS AGO

இமை இளைப்பாறும்
வேளையில்
இருள் நீக்கிட
என் கனாவிலும்
நீயே ஒளி..!

@guru_poetry

-


26 APR AT 10:24

உணர்வுகளை
மதியாத உறவுகள்
உடனிருக்கும் வரை
காற்றின் திசையில்
போகும் வெறும்
காற்றாடி தான்
சில பெண்களின்
வாழ்க்கை இங்கே..!

@guru_poetry

-


25 APR AT 14:05

நினைவாக.. நீ
நினைவில்
நீங்கிடா..நீ
நினைவாகி போன
நிஜங்களை
அழித்திட
துடிக்கும்
விழிகளிலும்
நீ (நீர்)...!

@guru_poetry

-


25 APR AT 7:00

வாழ்வின்
அனைத்து
நிலையிலும்
பறவையின்
சிறகுகளாய்
சேர்ந்தே
நம் கரங்கள்

@guru_poetry

-


24 APR AT 6:20

பூந்தென்றல் பூக்களிடம்
மோதுவதில்லை
அது புயலாக உருமாறும்வரை
வரையறை அறியாத
எல்லைக்குள்
இருக்கும் வரை
அனைத்து உறவுகளும்
இங்கு பூந்தென்றலே..!

@guru_poetry

-


23 APR AT 7:49

துயரமான
வேளையில்
என் தொண்டை
குழியில்
சிக்கிய
வார்த்தைகளை
உன் மூச்சுக் காற்று
சுவாசமளித்து
மீட்டுவிடும்

@guru_poetry

-


21 APR AT 7:37

சில உறவுகள்
வசந்தமாய்
துளிர் விட்டு
மனதை வருடி
சருகாய் உதிர்ந்து
விடுகின்றன
காலப்போக்கில்

@guru_poetry

-


20 APR AT 10:45

எளிதில் நெருங்கவிடாத
தனிமையை விரும்பும்
தாழ்ப்பாள் கொண்ட
உள்முகச் சிந்தனைக்கு
திறவுகோலாய் அமைவது
அன்பு மட்டுமே
அது உன்னிடம் மட்டுமே

@guru_poetry

-


18 APR AT 16:44

வெந்நிற அணலும்
தேகச் சுருக்கமும்
முதுமையின்
அடையாளம் இல்லை
மீண்டும் ஒரு
குழந்தை
பருவத்திற்கான
உளவியல்
பரிணாம வளர்ச்சி.!

@guru_poetry

-


17 APR AT 11:10

உணர்வுகள்
செயல்கள்
தவறிடும் போது
சமூக வலைதளம்
பின்னிக்கொள்ளும்
மாயவலை
நமக்குள் நாமே
சிக்கிக் கொண்டு
நம் கைகளுக்குள்
இருந்தும்
அடங்க மறுக்கும்
கையாடல்..!

Gurutweets

-


Fetching Guru Quotes