சையத் அமீருல்லாஹ் புதுக்கவிதை   (புதுக்கவிதை@அமீர்)
4 Followers · 4 Following

அன்பு + நட்பு+ தமிழ் = புதுக்கவிதை
Joined 22 October 2023


அன்பு + நட்பு+ தமிழ் = புதுக்கவிதை
Joined 22 October 2023

அகத்தியத்தின்
ஆறுதல் ஒளியில்
தொல்காப்பியத்துக்கு உரையெழுதும்
என் வாழ்க்கைப்பேனா

-



ஒருவரின் மீதான
கோபத்தை மாற்றும் சக்தி
அவரிடமிருந்து வரும்
நேசப்புன்னகையே...

-



மனிதர்களின்
அர்த்தம்
அவரவர்களின்
கதைகளில் உள்ளது

-



விதியின் கழுத்தில்
மீறல்களின் மண்டையோடுகள்
வெறியாட்டம்... வெறியாட்டம்...

-



அன்று நான்
கரைதிரும்பிய சருகு

இன்று நான்
நரம்பிழந்த சந்தனமர வீணைக்கட்டை

#18.04.2024

-



உப்புத்துளிகளையே
எண்ணிக்கொண்டிருக்காதீர்கள்

கடல்குடையுங்கள்

முத்துக்கள் ஆழத்திலிருக்கின்றன

-



செயலாற்றுவேன்
மற்றொரு வாய்ப்புக்காகக்
காத்திராதபடி

-



பெயரிடவியலாப்
பேரன்பாவது
அறிவாளிகளுக்குப்
பைத்தியக்காரத்தனம்

அவர்களுக்கு
அது தேவைப்படாதவரை

அல்லது

இதயங்கள் இயந்திரமானபின்

-



மீண்டும்
உன்னைச்
சந்திக்கமுடியாது

என் நெஞ்சம்
அவ்வளவு வலுவானதன்று

-



நானான
முருகுமெய்சுயத்தின் தினம்
இன்று

-


Fetching சையத் அமீருல்லாஹ் புதுக்கவிதை Quotes