மித்ரா   (✍️ மித்ரா)
398 Followers · 102 Following

19 APR 2023 AT 23:08

நான் எழுதிய
ஒரு கவிதை
உயிர் பெற்றது
உன்னை
ஏந்திக் கொண்டு!

-


18 APR 2023 AT 0:36

கோடை வெயிலில்
கொன்றை மரத்தடியில்
நின்றிருந்த நீ
தாங்கி நிற்கும்
வண்ணத்தை
எதிலிருந்து
பெற்றாய்?

-


18 APR 2023 AT 0:28

நான் உந்தன்
நீலமடி!
வண்ணம்
பூசாத
வானமாய்
இருந்தாய்
பிரிவில்!
வானவில்லாய்
சிரித்தாய்
வந்து சேர்ந்து!

-


17 APR 2023 AT 22:43

இளைப்பாறிக்
கொண்டிருந்தாலும்
மனதில்
படிந்திருப்பது
என்னவோ
பகலின் வெயில் தான்!

-


16 APR 2023 AT 21:42

இந்த காதல் பேரத்தில்
உன்னை ஒட்டுமொத்தமாய்
குத்தகை எடுத்துக் கொள்ள!

-


16 APR 2023 AT 21:36

பூ பூக்கும் போது
மனதில்
தோன்றும்
மலர்ச்சி
ஒவ்வொரு
மலர்தலிலும்
இருக்கும்,
உன் புன்னகையை
காணுவது போல!

-


15 APR 2023 AT 22:28

வைக்கப்படும்
பேரன்பு
வாழ்வின்
வரம்!

-


14 APR 2023 AT 21:16

மாறிவிட்டது
சூழ்ந்திருப்பவர்கள்
மாறிவிட்டனர்
நானும் மாறிவிட்டேன்
மாறாதது
வாடையும் கோடையும்
ஊடாக ஒரு வசந்தமும்

-


14 APR 2023 AT 21:05

பூவைப் பற்றி
எழுதிய
கவிதையை
வாசிக்கும்
போதெல்லாம்
அதன் வாசமும்
வந்திணைந்து
கொள்கிறது!

-


14 APR 2023 AT 20:55

கோடைக்கு பின்தான்
வசந்தம் வருமாம்!
கொளுத்தும் கோடை
வெயிலில்
உன்னைக் காணும்
ஒவ்வொரு நாளும்
பூக்கிறது என்னுள்
வசந்தத்தின் பூ!

-


Fetching மித்ரா Quotes