Veera Manimuthu   (மவீரா)
1.1k Followers · 569 Following

Software Engineer@Day
Amateur Writer@Night
I.G - @veeru_musings
Joined 23 April 2017


Software Engineer@Day
Amateur Writer@Night
I.G - @veeru_musings
Joined 23 April 2017
8 JAN 2022 AT 23:51

பிடரியில் இறக்கு - உன்
முத்தக் கோடரியை!

விடிய விடிய
இச் இச்சென்ற வெட்டுகளால்
துடிதுடித்துக் கிடக்கட்டும் இப்பசலையுடல்!

-


4 DEC 2021 AT 7:08

நீ அனுப்பும்
மின்முத்தங்களின்
கதகதப்பு போதும்
பசலையின் குளிருக்கு!

-


28 AUG 2021 AT 13:31

நீ வருகையில் மட்டும்
நிலாவை மேகங்கள் ஒளித்து
வைத்துக் கொள்கின்றன - என்று
நீ கோபம் கொள்வதில் நியாயமல்ல சகி!

மாடியேறி வரும் நிலாவைத் தரிசிக்கவே காத்திருக்கின்றன வான் மேகங்கள்!

நிலா அறிவதில்லை தானொரு நிலாவென்று!

-


6 AUG 2021 AT 18:30

நீயில்லாத குறையை
நிவர்த்திசெய்ய பார்க்கிறது
கண்ணாடியில் நீ ஒட்டிய பொட்டு!

-


26 JUL 2021 AT 13:13

வெறுமை நிறைந்த பொழுதுகளில்
உன்பெயரை எழுதி பூரிக்கின்றேன்!
ஒரு சொல்லில் கவிதையொன்றை
எழுதிவிட்டதாய்!

-


4 JUL 2021 AT 8:35

அவரவர் பொருட்டு!

-


29 JUN 2021 AT 8:56

சொல்லும் முன்னர் காதலை!
சொன்னதும் காதலியை!
பின்னர் கருவுற்றாளை!
பிறந்த குழந்தையை!
...,
சுமப்பது போன்றுதான்,
கவிதையைச் சுமப்பதும்!

யாவும்
சுகமான சுமைகள்!

-


5 JUN 2021 AT 21:33

மாலையில் பெய்த மழையால் இளவேனிற் காலத்தின் இரவில் நடுங்கும் குளிருடன் ஒரு கனவு!
குளியலறையில் என்னுடன் இன்னொரு நிழல்!
ஐயோ! பேயென்ற பயத்தில் முதலில் நடுங்கிப் பின்னர் 'அறியாமையே பேயென்று பெருமூளை பிடரிவரை வந்துரைத்ததும், தெளிவாக கவனித்தேன் கனவில் நிழலை!
அந்நிழல், மின்விளக்கினருகில் வலைவீசி வேட்டைக்காக காத்திருந்த சிலந்தியாருடையது!

அறியாமைப் பேயை அறிவால் அணுக
தறிகெட்டுப் போகும் பயம்!

-


7 MAY 2021 AT 8:59

நீ படித்துக் கொடுத்த புத்தகத்தில்
பக்கத்திற்குப் பக்கம் உன் மடி வாசம்
தேடி நுகரும் வாசகன் நான்!

-


13 APR 2021 AT 9:02

உனைக் காண வரும் சாக்குகளில்
கனத்திருக்கின்றன காதல்கள்!

-


Fetching Veera Manimuthu Quotes