Thiru kumaran  
84 Followers · 73 Following

Inquisitive..
Enthusiastic..
Nature lover..
From tamilnadu..
Joined 14 August 2017


Inquisitive..
Enthusiastic..
Nature lover..
From tamilnadu..
Joined 14 August 2017
12 SEP 2022 AT 22:08

காதோரம் அவள் குரல் கேட்கும்போதெல்லாம்,
கடலலை போல் ஓயாமல் ரசிக்கும் இதயம்.

-


4 JUL 2021 AT 11:28

அருகே அவள் முகம் தெரியும் தருணம்,
மனமோ துள்ளி குதிக்கும்.
சேர்ந்து நடக்கையில் விரல்கள் இடித்து,
ஸ்வரங்கள் புதிதாய் பிறக்கும்.
நீளும் பாதையில், அவளின் தடங்களை,
தொடர உள்ளம் விருப்பும்.
அவள் பாத சுவடுகள் சேர்த்து, அழகிய
சிலையாய் அகத்தில் தானே வார்க்கும்.
வெட்கத்தில் விலகி, விலகயில் விரும்பி,
அவளின் விழியோ திரும்பி பார்க்கும்.
அந்த கணத்தில் ஆயிரம் மின்னல் தாக்கும்.
பேச முனைகயில், திக்கி திணறி,
விக்கி தொண்டை அடைக்கும்.
விக்கும் போதும் அவளின் அழகில்
சொக்கி தானே தவிக்கும்.
நாடி துடிப்பில், அவளின் பெயரோ
விட்டு விட்டு ஒலிக்கும்.
அந்த ஒலியின் அலையில், அவளின் விழிகள்
அத்தனை கதைகள் பேசும்.
புருவத்தை உயர்த்தி, கோபத்தில் முறைத்து
அவளும் பார்க்கும் நேரம்,
ஆயுதமின்றி உள்ளுக்குள்ளே ஒரு குட்டி
போரே வெடிக்கும்.

-


3 JUL 2021 AT 16:11

உயரே பறக்கும் பருந்துக்கு தெரியாது,
நடக்கவே கஷ்டப்படும் குதிரையின் வலி.

நீந்தி விளையாடும் மீனுக்கு தெரியாது,
மூழ்கி உயிருக்கு போராடும் குரங்கின் வலி.

ஊர்ந்தே செல்லும் பாம்பிற்கு தெரியாது,
யார் அருகிலும் செல்ல முடியாத முள்ளம் பன்றியின் வலி.

உன்னை கடந்து செல்லும் யார்க்கும் தெரியாது,
உன்னுள் இருக்கும் வலி.

வலிகளை வில்லாக்கு,
முயற்சிகளை அம்பாக்கு.

உனக்குள் இருக்கும் தீப்பொறியை,
அக்கினி பிழம்பாய் மாற்றி,
அண்டசராசரத்திற்கு ஒளியூட்டு.

இலக்கை குறிபார்த்து மின்னலனே பாயிந்திட
எழுந்து வா பீனிக்ஸ் பறவையே.

-


20 JUN 2021 AT 13:42

கண்ணீரில் புதையும் கண்களை,
கண்டுகொள்ள முயலவில்லை.
கண்ணெதிரே உயிர் இருந்தும்,
பிடித்து வைக்க மனமில்லை.
விலகிச்செல்ல நினைக்கும் போதும்,
விட்டுக்கொடுக்க முடியவில்லை.
காற்றில் கரையும் கனவுகளை,
சலனமின்றி நோக்கும் வித்தை தெரியவில்லை.
நின்று பேசும் நினைவுகளுக்கு இடையில்,
நிகழ்காலத்தை முடக்குகிறது மௌனம்.
முட்டி செல்ல முனையும் போதெல்லாம்,
முடியாமல் தவிக்கிறது பாழ் மனம்.
விட்டு சென்ற இடத்திலே நிற்கிறது வாழ்க்கை,
கடைசி வரை உரியவரை சென்று சேரமுடியாத கடிதங்களாய்...
கல்லறையில்.

-


18 JUN 2021 AT 12:11

ஆதியும் அவளே அந்தமும் அவளே,
காதலை தேடும் வழிப்போக்கன் அன்றோ,
அது அவள் காலடியில் கிடைத்த கணம் 
என்னை அறிந்தேன் புதிதாய் பிறந்தேன்,
அவள் சிரிப்பின் மங்கள இசையில்
திருமணம் முடிந்ததன்றோ,
புதுமணம் ஆனதன்றோ,
அவள் எனக்கு கிடைத்த மழலையன்றோ,
அவளை சிறிதேனும் சிந்திக்க மறப்பந்தன்றோ,
அவளின்றி வாழ்வில் சிறப்பதன்றோ,
உயர பறப்பதன்றோ.

-


8 JUN 2021 AT 21:20

ஆதியும் அவளே,
அந்தமும் அவளே,
சொந்தமும் அவளே,
பாந்தமும்(இணக்கம்) அவளே,
நித்தமும் அவளே,
என் மொத்தமும் அவளே,
கண்ணுக்குள் உறைவதும் அவளே,
கண்ணாடி போல் மிளர்வதும் அவளே,
துக்கமும் அவளே,
என் ஏக்கமும் அவளே,
பேரண்டமும் அவளே,
ஏன், அவள் பெயர் கூட அழகே...

-


6 JUN 2021 AT 20:56

மண் வாசம் வீசவும் இல்லை,
கருமேகங்கள் சூழவும் இல்லை,
என்மேல் மழையாய் பொழிகிறாள்.

எனதருகே அவளும் இல்லை,
அவளை நான் எண்ணவும் இல்லை,
கண் முன்னே வந்து வந்து போகிறாள்.

கொலுசொலியை தேடவும் இல்லை,
வளையல்களை பார்க்கவும் இல்லை,
இவ்விரண்டையும் உள்ளுக்குள் இசைக்கிறாள்.

மேற்கு தொடர்ச்சி மலையிலே,
மலரும் பூ தான் நீயடி,
தொலைந்து போன என் இதயம் தான்,
வசிக்கும் முகவரி உன் காலடி,
வெளிச்சம் தேடும் விட்டில் போல்,
உன்னை தொடர்கிறேன் சற்று பாரடி.

-


15 MAY 2021 AT 19:35

காய்ந்துலர்ந்த துணியணைத்தும்,
காற்றினிலே அசைவதெல்லாம்,
அவள் வருகையை கூற தான்
சைகை கொஞ்சம் கொடுகிறதே.

கருமுகில்கள் கூடி தான்,
மழை பொழிய நினைத்தாலும்,
காத்திருந்து கச்சிதமாய்
அவள் மேலே பொழிகிறதே.

கீழே வரும் துளிகளெல்லாம்,
பூமியை நோக்கி செல்லாமல்,
அவள் கைநீட்டி பிடித்திட தான்,
அந்தரத்தில் மிதகிறதே.

மழை துளிகள் விழ்ந்தாலும்,
மண்ணுக்குள்ளே போகாமல்,
அவள் கன்னகுழியில் தேங்கிட தான்,
மீண்டும் மேல் ஏறி செல்கிறதே.

சேர் சேகதிகள் பக்குவமாய்
ஒரு சேர தேங்கி தான்,
அவள் மிதித்த அச்சுகளை
வார்த்தெடுத்து வைக்கிறதே.

-


15 MAY 2021 AT 9:03


அனல் பறக்கும் மூச்சு காற்று,
மழை சாரல் ஈரம் பார்த்து,
ஒன்றோடு ஒன்று பேசி கொள்ள,
வெளியே செல்ல வழிகள் இல்ல.

மணல் காற்று எங்கும் வீச,
மனம் ரெண்டும் கொஞ்சி பேச,
இடி ஒன்றும் தடுப்பு அல்ல,
இடித்தாலும் பரவாயில்ல.

அவள் அழகில் நனைந்தவாறு,
அங்கே சொக்கி மயங்கிவாறு,
முந்தானை எடுத்து மெல்ல,
தலையை தோட்டி தொடைத்து கொள்ள.

கண்ணோடு கண்ணும் நோக்க,
தூரத்தில் மின்னல் தாக்க,
ஒளியொன்றும் பெரிது அல்ல,
அவள் விழியோடு ஒப்பிட்டு சொல்ல.

-


14 MAY 2021 AT 10:56

விண்கல்லின் துகளை போல,
உன் பாதத்தின் மணலை மெல்ல,
சேமித்து வைக்கிறேன். அகத்தில்
அருங்காட்சியம் அமைக்கிறேன்.

நீ தொட்ட இடங்கள் மேலே,
விரல் ரேகை அச்சு பதிய,
வண்ணங்கள் இல்லா ஓவியம்
ஒன்றை பதிப்பு எடுக்கிறேன்.

உன் சிரிப்பை கொஞ்சம் சேர்த்து,
கைகாப்பில் நானும் அணிய,
உலோகம் உரசும் போதும்
உன் சிரிப்பு ஒலிக்க கேட்கிறேன்.

கார்குழலில் மல்லிகை போல,
உன் வாசம் எங்கும் படர,
அந்த காற்றை உள்ளிழுத்து
தக்க வைக்கிறேன்.

மறுதாணியின்றி கைவிரல்கள் சிவக்க,
சற்றே புரியாமல் நானும் தவிக்க,
உண்ணும்போது உன் செவ்விதழ் விட்ட
மிச்ச நிறமே.

கண்ணெதிரே அழகின் மொத்தம்,
கண்ணாடியும் பிரதிபலித்தே சொக்கும்,
பிம்பங்கள் மாயை அல்ல,
இல்லாத பொய்கள் சொல்ல.

-


Fetching Thiru kumaran Quotes