வேகமாக செல்பவர்
எங்காவது
இளைப்பாறுவர்!
விவேகமாக செல்பவர்க்கு
இளைப்பாறுதலே
அவர்கள் வேட்கை தான்!-
அதி வேகமாக
நண்பர்களுடன் வாகனத்தில் பறந்து
ஆம்புலன்சை கடந்தான்...
வெற்றிக் களிப்பில் குதித்தான்...
அவன் கடந்து சென்றது
தன் தாயைத் தான் என்று
தெரியாமலே....
-
மஞ்சள் சிவப்பாக மாறும்
ஐந்து நொடித் துளிகளுக்குள்
ஊசலாடுகிறது உரிமையே அற்ற
உன்னத வாழ்வுகளும் சேர்த்து
-
எல்லாம் மறந்துவிட்டேன்,
சாலைப் பயணத்தில்,
ஒரு எண்பதைத்
தாண்டும் வேகம் மட்டும்
உன்னைத் தவறாது
நினைவுபடுத்தித் தொலைக்கிறது..,-
நான் புத்தகத்தை
வாசிக்க எத்தணித்த
வேளையில்
முந்திக்கொண்ட காற்று
வேகமாக புரட்டியது
பக்கங்களை. .
-அனுபாரதி
-
கோபத்தில்
வேகமாய்
முடிவெடுக்காதே
முன்னறிவிப்புடன்
பல விபத்துகளை
எதிர் கொள்ள
வேண்டியிருக்கும்.-
"இப்டியே போனா எப்பய்யா போய் சேர்றது..?"
"இப்டியே போனா என் வுட்டுக்கு போறதுக்கே விடிஞ்சுடும்"
"மூதேவி..வண்டிய ஸ்பீடா ஓட்டுனாதான் என்னா..?.வண்டிய இந்த உருட்டு உருட்டுறான்"
என்று தன் வீசப்படும் அனைத்து வசவுகளையும் பொறுத்துக் கொண்டு அமைதியாய் வண்டியை செலுத்தினார்
வாகன விபத்தில் தன் குடும்பத்தை இழந்த பேருந்து ஓட்டுநர்.-
என்னை எங்கே நகர்த்தி செல்கிறது காலம் என தெரியாமல்
எங்கும் நகராமல் ஒரே இடத்தில் நான்-