விடியலின்
ராகம்
மயிலின்
அகவல்-
எளிமையான வரிகளைப் போட்டு
எனக்காக எழுதினேன் ஒரு பாட்டு
இடையில் ராகமென நீ புகுந்து கொண்டாய்
என் பாதி வேண்டுமென பகிா்ந்து சென்றாய்..,-
நான் பாட மறந்த ராகமாக!
என்னுள் ரீங்காரமிடும்..
சிறு சிறு ஆசைக்கு,
இனிய குழலிசை மீட்டிட..
எண்ணியே நகர்கிறது!
என்னுள் தொலைந்த..
மனதின் இன்னிசை!-
ராகமும் தாளமும்
ரம்மியமாக...
அதே சமயம்
ரகசியமாக...
எங்களுக்கு மட்டும்.
© நிலானி ®-
பேசும் மௌனத்தில்
உன் வாசமே
வீசுது..
புதிதாய் என்னையும்
பூக்க
வைக்குது..
எனை உணர்ந்திட
காலமும்
கேட்குது..
சொன்னதெல்லாம்
அறிந்தாயா
என உனை
குட்டவும் வைக்குது.. !-
என் தனிமைச் செவியில் 🙉
டன்டனக்கா! வாசிக்கும் 🎧
ச, ரி, க, ம,ப,த, நீ... 🎵
(( ⬇️))
-
நான் கேட்டேன் ஒரு ராகம்..
எதிரில் அவளைக் கண்டதுமே என் நெஞ்சிலே காதல் மோகம்..
பதிலுக்கு அவள் என்னைப் பார்த்து புன்னகைத்தாளே என்னே ஒரு சுகம்..
சற்றென்று தீர்ந்ததுவே என் தாகம்..-
நாட்டியமாடும் அவள் கண்களுக்கு
நாதஸ்வரம் வாசிக்கிறது என்
நாவானது.
ஏழு ஸ்வரங்களையும் தவிடுபிடியாக்கிய
அவள் கண்களிடம்
எட்டாவது ஒன்றாக மூன்றெழுத்து சொல்லை
எடுத்துவிடுகிறது.
தோற்ற ஏழும்
எட்டாவது இல்லை
என்ற நம்பிக்கையில்..-