முகமறியாது கவிதையில் இனைந்து எந்தன் வாழ்வில் ஒரு அங்கமாய் மாறினாய்...
தோள் கொடுக்கும் தோழனாக
நீ தோள் கொடுத்தாய் பலமுறை எனக்கு ... வருத்தமான தருணங்களையும் மகிழ்வாக்கியது
உன் பேச்சு..
எல்லாரையும் உந்தன் சிரிப்பால் அடிமை ஆக்கும் நாயகன் நீ...
கவலை இருப்பினும் ,
அனைவரையும் காமடி செய்து கலகலப்பாய் வைப்பாய்...
உந்தன் குழந்தைதனத்தை கண்டு பலமுறை பொறாமை கொண்டிருக்கிறேன் நான் .. நம்மை
மனதால் ஒன்றாக்கியது இந்த கவிதை பயணம்...
உன்னை நண்பனாய் எனக்களித்த "நட்புக்கு"
நான் நாளெல்லாம் நன்றி சொல்வேன் ...
நாளெல்லாம் நட்புடனே உன் கை விரல் பிடித்து உந்தன் தோழியாக வாழ்வின் இறுதிவரை பயணிப்பேன்....
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ..........
உந்தன் தோழி,
இனியா-
முளைத்த தளிரில்
மூடிய பூக்கள்
வளரும் காலமென்னவோ
வசந்தகாலம்
முடிவுற்ற சில எழுத்துக்கு
முடிச்சுப் போட்டதென்னவோ
நிகழ்காலம்
முடிச்சுகள் அறுந்துப் போகலாம்
எழுத்துகள் அழிவதில்லை
-
கோடிட்ட இடத்தில்
கூடிக்கொண்ட நேரத்தில் கூடலுமில்லை ஊடலுமில்லை
கவிப் பாடலுமில்லை
ஆனால்!
உயிர் வாழும் வரை
ஓசைமட்டும் உண்டு
ஓய்வில்லா இதயத்தின்
ஒவ்வொரு நினைவும்
-
தனிமையில் சில கேள்விகள்.,
தகுதி வேண்டுமோ ஆசைகளுக்கு...
தள்ளி நின்று வேடிக்கை பார்க்க தகுதி வேண்டாமோ...
கனவாக கலைந்திடுமோ...
நிழல் நிஜமாகும் என்று நம்புவது முட்டாள் தனமோ...
அம்முட்டாள் நானோ...-
ஏய்!அழகா
உன்னை
கண்டாலே
என்அடிநாதம்
சிலிர்க்குதடா!
காற்றிலாடும்
இறகைப்போல்
தாவணியும்
கூசுதடா!
ஓர்பார்வை இங்கிருக்க
முழுப்பார்வை உனக்கிருக்க
கிறுக்கு பேச்சிலே
கிறுகிறுத்து போனேனடா!
குத்தாத மீசையிலே
குடும்பம் நடத்திப் பார்பேனடா..!-
நீ சிதறவிட்ட
சில்லறை காசுகள்
செல்லாக் காசுகளாக
மாறிவிடக்கூடாது என்பதற்காக
இரு ஆயிரம் சில்லறை காசுகளை
பத்திரமாக
மறைத்து வைத்திருக்கிறேன்
மறு அறிவிப்பு
வரும் நாளுக்காக.
-
முடிவெடுப்பதாக இருந்தால்
இப்போதே
முழுமனதுடன் முடிவெடுத்துவிடு
ஏனெனில்!
முறிந்த மூங்கில் விதைகள்
முளைத்துவரப் பல காலம்
பிடிக்கும்.
-