QUOTES ON #புரிதல்

#புரிதல் quotes

Trending | Latest
12 NOV 2019 AT 23:34

திகட்டுவதாய் உணர்த்திய
சமிக்ஞைகள் அறிந்த பிறகு
மொத்தமாய் விலகி இருக்கிறேன்
நீ விரும்பும் அளவுக்கு
அன்பை குறைக்கத் தெரியவில்லை

-


12 MAY 2021 AT 19:59

விளங்கி கொள்வதற்கும்
வினாக்களுக்குமான
வேறுபாடென்பது...
விழும் போது தாங்க
வரும் கைகளுக்கும்...
விழுந்த பின்பு தூக்கிட
வரும் கைகளுக்குமானது...!

-


2 MAY 2023 AT 10:50

புரிதல்

வாழ்க்கையில் புரிந்து கொள்ளாமல் யாரையும் பிரிந்து செல்வதில்லை....
புரிந்து கொண்டு சில வலிகளையும் காயங்களையும் சுமந்தே வேறு வழியின்றி பிரிந்து செல்கின்றனர்...

-



கலகலவென்று இருந்தவர்கள்
திடீரென்று அமைதியாகிவிட்டால்
அவர்களை எவரும் புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம்

-


9 DEC 2020 AT 20:36






















மகி...

-



தயக்கமா?
கலக்கமா?
ஏக்கமா?
கோபமா?
வருத்தமா?
வேதனையா?
வலியா?
உன் வதனத்தை
கண்டு எதையும்
புரிந்து கொள்ள
முடியவில்லை
கண்மணி

-


6 AUG 2020 AT 5:32

புரிதல்

அவனுக்கு
எதுவெல்லாம்
பிடிக்காதோ
அதை மறந்தும்
அவள்
செய்யமாட்டாள்...

அவளுக்கு
எதுவெல்லாம்
பிடிக்குமோ
அதை அவனும்
செய்யமாட்டான்.

-


8 JUL 2020 AT 13:07

கடமை செய்து விட்டு
பலனை எதிர்பார்க்க
கூடாதாம்...
அதிலும் ஒரு எதிர்பார்ப்பு
இருக்கவே செய்கிறது...
நாம் செய்ததையாவது
புரிந்து கொண்டார்களா
என்று...!

-


8 JUN 2020 AT 16:49

கொஞ்சம் கொஞ்சமாய்
தொடங்கிய தலைவலி
முகத்தில் பிரதிபலிக்கும்
நொடியில்...
முகத்திற்கு நேராக
நீட்டப்படும் தேநீரில்
நிறைந்துள்ளது புரிதலின்
உச்சம்...!

-