நலமா என்றால் நலம் என்ற பதிலில்
ஓர் இயல்பும் சற்று ஆசுவாசம் அடைவோம்
இப்போது அதே கேள்விக்கு பதில் வந்தால்
மனம் பிரார்த்தனையில் ஈடுபட்டு விடுகிறது..❤️-
நான் வேண்டாமென நீ நினைத்த
பின்பு வேண்டாதவள் ஆகவே
இருந்து விடுகிறேன்
என்றென்றும் நலமுடன்
இறைவன் அருளுடனும்
இருக்க வேண்டுகிறேன்-
பலி கொடுக்கப்
போகும் அந்த
ஆட்டினைக் காப்பாற்ற
பிரார்த்தனையை
நீட்டிக்கிறது குழந்தை !
-
பலமுறை சுற்றிவந்து
பரிகாரம் முடிக்கப்பட்டது
நடக்க விருந்த நல்லது
அப்போது நடந்து விட்டதால்
தொற்றிக் கொண்டது
பரிகாரப் பிணி
பிரார்த்தனை
மருந்துகளின்றியே.📍
-
முடிவில்லாத
பிரார்த்தனைகள்
உங்களின் காதுகளில்
கேட்காத வரை அவளின்
சாட்டையடி சத்தங்களும்
உங்களுக்குள் எந்த
தாக்கத்தையும் பெரிதாய்
ஏற்படுத்தப் போவதில்லை !
-
கனத்த கனவுகள்
காண்கிற
கணபொழுதிலே
பழிக்க வேண்டுமென
பிரார்த்தனை செய்த
பல கனவுகளின்
ஆசைகளும்
அஸ்தமமாகிவிடுகிறது!
_ ஷாலினி கணேசன்-
YQ
கண்மணிக்கும்
பாபா விற்கும்
சக
சிந்தனையாளர்களுக்கும்
இவனின் ஒரு சிறு வேண்டுகோள்.
தொற்றில்
உயிரிழந்தவர்கள் உடல் புதைக்க
கல்லூரியில் ஒரு பகுதியை
தருவதாக சொன்ன
திரு. விஜயகாந்த் அவர்கள்
பூரண நலம்பெற பிரார்த்திப்போம்.
அரசியலுக்கு அப்பால்
மனிதம் தழைத்தோங்கட்டும்.
புண்ணியங்கள்
அவரைச் சேரட்டும்.
-
விரைவில்
கொரோனாவின்
தாக்கத்திலிருந்து
உடல்நலமும் மனநலமும்
குணமடைந்து
இயல்புநிலைக்கு திரும்ப
ஒற்றுமையின் வழியில்
பிரார்த்தனை செய்வோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏-