நம்
காதலின்
எடையைக்
கணக்கிட
வா
நிலா
சென்று
வரலாம்
இப்பூமித்
துலாபாரம்
எங்கிலும்
தூசி-
உன் 5 விரல் கோர்த்து 🤝
உன் விருப்பப்படி ❣️
ஒருமெல்லநடை👣👫
ஊர் உறங்க😴
உள்ளம் சினுங்க🤩
ஒத்தையடி 🌹
பாதை😘
பனி விழும்🌨️
காடு 🍂
அபுடியே 🦋
நிலவினை🌒
நோக்கி🌙
ஒரு பயணம்👣
செல்ல தான் ஆசை❣️
But no one✌️-
இரவின் குளிரில்
நிலவின் ஒளியில்
தனிமையில் சிரிக்கிறேன்
என்னவனின் எண்ணத் தீண்டல்களால்...-
கதைக்கு நீ அம்புலி
கவிதைக்கோ.,.... மதி
அறிவியலுக்கு....... கோள்
அவளுக்கு நீ தான்.... துணையாக
அவனுக்கோ அவளின் ஒற்றை மச்சம்
இத்தனையும்..... உன் அழகு-
திவ்ய
திங்களே...
வான் முழுதும் அபகரித்த
உன்
இருள் என்னும்
கருங்கூந்தலில்
ஆங்கங்கே
சிக்குண்ட
பொடுகுத்
துகள்களோ
நட்சத்திரங்கள்...-
தூரத்து நதிக்கு
இங்கிதமே இல்லை
இத்தனை சத்தமாகவா
பாறையை முத்தமிடுவது
வெக்கித்தான் போகிறது
வெண்ணிலவு-
உன் மார்பு மீது தலை சாய்ந்து
உன் மூச்சுக் காற்றில் குளிர்காய்ந்து
இரவெல்லாம் வான் நிலவை ரசித்தபடி
நாம் கதை பேசிக்கொண்டிருக்கும் நேரம்
இன்னும் சில நொடிகள் நீளாதோவென
நானும் ஏங்கினேன்.
வான் நிலவும் ஏங்கியது.-