QUOTES ON #தோழமை

#தோழமை quotes

Trending | Latest
29 APR 2020 AT 9:46






-


16 FEB 2021 AT 15:42

பயணத்தின் இனிமையை அறிந்திட.. நினைவெனும் உற்ற தோழமையுடன் பயணித்திடுங்கள்..

-



....

-


23 JUN 2020 AT 10:14

வீர தமிழச்சியே,

தமிழ் என்றும் அழியாதது போல
அதில் மேல் உள்ள உனது மோகமும் அழியாதது.

கருணை மேல் காதலும்
தமிழ் மேல் மோகமும் கொண்டு
சுற்றி திரியும் மான் நீ.

பட்டுச்சேலைக்குள் புதைந்து கிடக்கும்
வெட்கப்பார்வைகள் யாவும்
ஒரு சேரத் தோற்றுப் போகும்
உனது வீர கருவிழி களை கண்டாலே.
தமிழினை போற்றும் தமிழச்சிக்கு
தோழியின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

-


10 OCT 2019 AT 21:12

தோள் சாயும் போது
தோழனாகும் நீ...
மடி சாயும் போது
மட்டும் மறக்காமல்
மாறி விடுகிறாய்
என் தாயாக...!

-


25 NOV 2017 AT 0:05

யாரோ ஒருவன் என தொடங்கி நானே அவன் என்ற அளவிற்கு நம்முல் ஒன்றாக கலக்க கூடியவனே உண்மையான நண்பன்.

-



அடங்க மறுக்கும் பேராண்மை
ஆகமவிதி களையும் தலைமை
இடுக்கண் அகற்றும் தகைமை

ஈழம்தமிழீழம் கேட்கும் உரிமை
உணர்வைக் கூட்டும் மேன்மை
ஊராண்மை பேசும் திண்மை

எழுச்சியை ஊட்டும் வண்மை
ஏர்தொழில் போற்றும் வளமை
ஐநாவிலுரை ஆற்றும் பெருமை

ஒடுக்குமரசை கேட்கும் செம்மை
ஓட்டரசியல் எதிர்க்கும் ஆளுமை
ஔதாரியம் அளிக்கும் கேண்மை
அஃது களமாற்றும் எம்தோழமை

-



தோழர்அருண் மே17 இயக்கம்

தோள்சுமக்கா பிள்ளையிவன்
தோழரென அழைத்திடுவான்

தோற்றத்தில் முழுமதியழகன்
தோரணையில் அருணனிவன்

தோள்கொடுக்கும் பேரன்பன்
தோலுரிக்கும் போராளியிவன்

தோன்றாத்துணை பேராயன்
தோன்றிடும் பேரொளியிவன்

தோடமில்லாத இயக்கமிவன்
தோடிப்பண் இசையுமுமிவன்

தோலாட்டமதை வேரறுப்பான்
தோல்வியை தோற்கடிப்பான்

தோயமதின் வெண்முத்திவன்
தோயதரமதின் பனித்தலிவன்

தோய்ந்தாரின் முக்கியனிவன்
தோழமையின் தோன்றலிவன்

தோடகத்தின் செஞ்சுடரோனே
தோன்றுகயென்றும் புகழோடு!!

-