காற்றொன்றைத் தவிர
யாருமறியா உன் தேகம்!
கருநிறம் இழந்துவிட்ட
வெண்பஞ்சு மேகம்..,-
தீண்டும்
காதலைவிட..
தீண்டாத
தேடல்கள்
தான்..
தேகம் (மனம்)
தொட்டுவிடும்
விரைவில் !-
காலில் ஒட்டிய மண்ணும்
உதறும் வரை தொடருதடி!
காற்றுள்ள வரை இசையும்
காதருகே இதமாய் வருடுதடி!
நீளாத பயணமும் நீயில்லாது
நெடு நேரம் போகுதடி!
நேற்று உன் தேகம் தந்த
வெப்பச்சூடு மட்டுமெங்கே?-
மழை துளியோ உன்னை தேடி விழைய!
உன் தேகம் பட்ட துளிகள் வேகம் பெற்று
கவியாக மாறி காற்றெங்கும்
வாசம் வீசுகிறது!-
தேகங்கள்
வெறும் கூடுகள்,
அவன் வந்து
தங்கிப்போகும்...
அவனின்றி
ஓர் அணுவும் அசையாது...-
தேகம் தீண்டுவ
தறிந்தும் நாஎழாது
கண்மூடி ரசிக்கும்
ஓராயிரம் கைவிரலை
மீண்டும் ஏங்கியபடி-
உன்
தேகத்தின்
முழுவதையும்
நான்
ஆட்கொள்ளும்
தருணம்
வரை
காத்திருக்க
நினைவு
கொண்டது
உன்
மௌனத்தின்
அழகு-
நகமது
வளர்ப்பதையும்
நான் நிறுத்தி
கொண்டேனடி..
கண்மணியே
உன் தேகமது
காயப்பட கூடாதென்றும்
காலை பொழுதினில்
காட்டிகொடுத்திட
கூடாதென்றும்..-