உன்
சொல்பேச்சு
கேட்டு ஆடட்டும்
எனைப்போல
என்றுதான்
ஜிமிக்கி அணிந்து
திரிகிறேன் நான் !!-
14 FEB 2020 AT 15:52
6 MAR 2020 AT 21:18
அவளின்
குறும்பு தனத்திற்கு
ஏற்ற மாதிரி ஜால்ரா
தட்டுகிறது ஜிமிக்கி !
-
21 JAN 2021 AT 10:55
செல்லச்
சண்டைகளின்
போதெல்லாம்
ஜிமிக்கி
அணிந்து
கொள்கிறேன்..
"வா"வென்று
உன்னை
சமிக்ஞையில்
அழைக்க !-
10 APR 2022 AT 14:22
அங்கும் இங்கும்
தூரி ஆடிடும்
அவளின் ஜிமிக்கியை
நோக்கியே என்
கண்களின் மாநாடு !
-
2 AUG 2019 AT 11:19
காதணி மேல்
காதல் என்
காதலிக்கு
இல்லை இல்லை
காதலியின்
செவி மேல்
மோகம் இந்த
காதணிக்கு
கொஞ்சம்
நாணத்துடன்
கொஞ்சியபடி...-
13 NOV 2019 AT 15:25
தென்றலில்
அசைந்திடுமோ
தேர்..
இவளின்
செவிதனில்
பற்றிய தேர்
தென்றலில்
அசைந்தாட
கருங்கூந்தலாக
அவளுள் சிக்கி
கொண்டேன் நான்..
-
27 JUL 2020 AT 16:32
அவன் வாங்கி கொடுத்து
நாள் முதல்
இன்று வரை
நிற்கவே இல்லை அதன் ஆட்டம்
காற்றின் இசைக்கு ....
என் ஜிமிக்கி !!
-
12 NOV 2021 AT 17:25
மழை வந்ததால் குடை தேடினேன்,
அவள் காதருகிலே - தஞ்சம்
கொள்கிறேன்...
#ஜிமிக்கி
#கிறுக்கனின்_கிறுக்கள்_பிழை...-