விலகியிருத்தல் நலம்...
சேர்ந்திருந்து சிதைவதை
காண்பதை விட...!!!-
என் மூச்சுக் காற்று உன் மூச்சுக் காற்றுடன் கலந்திடவே
எம் பிரிவு அது நீங்கி அருகில் நாம் வந்திடவே
கனவுகளும் நிஜமாய் மாறிடவே
காதலில் நாமும் கரைந்தே போகலாம்
உயிரே வா
உறவே வா
-
இங்கு சேர்ந்து வாழ்வோர்.. எல்லாம் இணைந்து வாழ்பவர் அல்ல...! விதிமுறைக்கு உட்பட்டு விதியின் வழியே செல்பவரும் உண்டு..!-
உதிரமெல்லாம்
உறைந்திட்டாய்,
உனை சேர்ந்திடுவேன்
என்றென்னும் நொடிகளெல்லாம்
உல்லாசமாய் உலா
செல்கிறேன் உள்ளுக்குள்ளே!-
💕
நீ என்னுடன் ஒவ்வொரு கணமும்
இருக்க வேண்டும்.
இவ்வுலகில் உள்ள அழகையும்
உன்னுடன் சேர்ந்து மட்டுமே
நான் ரசிக்க வேண்டும்.-
அழகான கனவுகள்
என் நாட்களை அலங்கரிக்குதே
கனவுகள் நிஜமாகிட
மனம் ஏக்கம் கொள்ளுதே
என்னில் என்றடா சேர்ந்திட போகிறாய்
கனவுகளின் அழகை
நிஜமாக்கிடவே
-
பூட்டி
வைத்திருக்கும்
புன்னகைக்கு
விடிவு
காலமா?
நீ எனை
சேர்ந்திடும்
அந்த
நொடியிலிருந்து!-