QUOTES ON #கோப்பை

#கோப்பை quotes

Trending | Latest
17 SEP 2017 AT 19:31

பல வெற்றிக் கோப்பைகளையும் வெறும் குப்பைகளாக்கியது, அவன் கையிலிருந்த ஏர்கலப்பை...

-


7 DEC 2018 AT 17:07

கொள்ளை காதல் அவள் மேல்..
நட்பெனும் கவசம் போட்டு
வலம் வந்தாள் அவள்...

அதிர்ஷ்டவசமாக என் வீட்டில்
தோழிகள் புடை சூழ அவள்...

சென்ற பின் நான் சிதறி கிடந்த
அவள் சிரிப்பினை தேடினேன்...
என் தாயோ அவள் குடித்து விட்டுச்
சென்ற கோப்பையை தேடினாள்....

-


11 APR 2020 AT 20:21






-


8 FEB 2018 AT 7:15

Let our cupboard of heart be filled with cups of hopes for an aromatic cup of life...

நம் இதயத்தை நம்பிக்கை என்னும் கோப்பைகளால் நிரப்பினால், நமக்கு வெற்றி கோப்பைகள் நிச்சயம்...

-


17 JUN 2020 AT 6:40

ஒரு கோப்பையின் விளிம்பில் இன்னும் மிதந்துக் கொண்டிருக்கிறது குளம்பியின் ஒரு துளி.
பெருமூச்சுவிட்டபடி குடித்துமுடிக்கிறது சிற்றெறும்பு ஒன்று.

-


17 SEP 2017 AT 21:19


வாங்கி குவித்த
வெற்றிக் கோப்பைகள்,
வெறும் காட்சிப் பொருளாய்!
வேலை இல்லா
பட்டதாரியின் வீட்டில்!

-


18 SEP 2017 AT 0:26

வற்றிய கிணற்றுக்குள்
எறும்புகள் தற்கொலை,
கோப்பையில் தேநீர்!

-


19 SEP 2017 AT 22:05

கோபத்தின் விளைவுதனை அஃறிணையும் புரிந்து கொண்டது!!!

சாட்சியானது உடைத்து தெறித்த கண்ணாடிக் கோப்பை

-


17 SEP 2017 AT 23:43

"கோப்பைகளும் காதலித்து கொண்டிருக்கின்றன அவள் மிச்சம் வைத்த தேநீரை"

-


11 SEP 2021 AT 11:16

அவளின் விரல் தீண்டிட கோப்பை
காம்பும் ......
அவளின் இதழ் தீண்டிட கோப்பை
விளிம்பும்.......
ஏங்கிட!!!
இவளோ...!
இவளை பற்றி சற்றும்
எண்ணமில்லாத......
இந்த தேநீரை அவள் சுவைக்க
ஏங்குக்கிறாள்......

-