QUOTES ON #கோபம்

#கோபம் quotes

Trending | Latest
10 JUN 2021 AT 14:27

தழும்பை
நிரந்தரமாக
விட்டுச் செல்லும்
தீ...

-


13 JUN 2020 AT 6:12

கோபத்தில் கூட
இழக்காத நிதானமும்
கொட்டாத வார்த்தைகளும்
வருமுன் காக்கும்
மருந்துகள் தான்...!

-



மிதமிஞ்சிய பிழைபுரிதலில்
அவ்வப்போது முறுக்கிக் கொள்ளும்
கோபங்கள் குறைக்க எம்முறை கையாளுவதென்ற குழப்பமே
என் சொற்போரிலா...
அவன் இதழ் போரிலா...!?

-


7 OCT 2019 AT 19:44

உரிமையான
உன் கோபத்தில்
உயிரைத்தின்ற
வலியிருப்பினும்
உறுதியாகவே
இருக்கிறேன்...
நீ எனக்கு மட்டும்
என்பதில்!

-


7 MAR 2019 AT 2:31

உன் மீதுள்ள கோபங்களையெல்லாம்
முற்றாக அழித்து விட்டேன் - என்
கண்ணீர்த் துளிகளைக் கொண்டு

-


22 JUL 2018 AT 21:14

கோபத்தில் கத்திவிட்ட அப்பா
மறுகணம் அழைக்க
முகம் தூக்கி, ஆனாலும்
அவர் நோக்கி நடந்திடும்
குழந்தையின் மன்னிப்பு அழகு!

©சாரா ஜோதி

-


1 JUN 2020 AT 12:32

ஒவ்வொரு முறை
சமாதானத்திற்கு
பின்பும் ...
விழுங்கப்படுகிறது
சில நியாயம் கிடைக்காத
கோபங்கள்...!

-


18 MAY 2020 AT 12:04

கோவத்திற்கு விளக்கம்
கேட்டு நிற்காமல்...
அதை புறக்கணித்து
அரவணைக்கும் உறவு...
ஒரு ஈடு இணையற்ற
வரம் தான்...!

-


7 MAR 2019 AT 16:34

தோழி கவிதாயினி

-


11 AUG 2020 AT 17:51

கொட்டித் தீர்க்க முடியாத
கோபங்களெல்லாம்...
கொந்தளித்து கிடக்கிறது
உள்ளுக்குள்...
கொஞ்சம் கொஞ்சமாய்
மிஞ்சியிருக்கும் ஓரிரு
மகிழ்ச்சியை உருக்கிடும்
அமிலங்களாக...!

-