QUOTES ON #கிறுக்கனின்_கிறுக்கள்_பிழை

#கிறுக்கனின்_கிறுக்கள்_பிழை quotes

Trending | Latest

பூமியில் பிறந்த
மணிதருக்கெல்லாம் - ஆறிலும் சாவு அறுபதிலும் சாவு...

காசுபணம் மட்டும்‌
கம்மியாய் போனால் - அவனது வாழ்வில் தினம்தினம் சாவு...

#கிறுக்கனின்_கிறுக்கள்_பிழை...

-



ஆயிரம் இன்னல்கள்,
அதில் பல பின்னல்கள்...

சிக்கிக் கொண்டேன் நான் - சிறை
மீட்போர் யார்....

சிதைந்தவன் நான் - சிகிச்சை
அளிப்போர் யார்...

விதியை வியர்வை கொண்டு -
இப்போதே சரி செய்ய ஆசை...

வழி தேடும் நான் - வழி காட்டுபவர் யார்...

அது நானா - ஆம் அதுவும் நானே....

#கிறுக்கனின்_கிறுக்கள்_பிழை...

-



காதலுக்கு சட்டமே சரி என்று சொன்னாலும் - இந்த கட்டங்கள் (ஜாதகம்) சதி செய்வதேனோ...

உலகின் குறுகிய நேர விவாகரத்து எதுவென்று தெரியுமா - அது எங்கள் இருவரின் ஜாதக புத்தகமே ஆகும்....

ஜோதிடர் ஜாதகம் இனையாது என்று சொல்லியும் கூட - அவள் வீடு செல்லும் வரையில் இனைத்து தான் இருந்தது அவ்விரு ஜாதகமும் ஒரே பையில்.....

#வாழதான்_ஆசை_வாழவைப்பாயா #கிறுக்கனின்_கிறுக்கள்_பிழை....

-



நிராகரிக்கப்பட்ட காதலுக்கு ,
நிதமும் துனையாக‌
இருந்து உதவி செய்வது
நினைவுகள் மட்டுமே - உயிர் அற்ற உடலுக்கோ அவை உணவளித்து கொண்டிருக்கிறது.....

#கிறுக்கனின்_கிறுக்கள்_பிழை...

-



சிறு கதை
பேசிட - சிறு நேரம் ஒதுக்கு ...
கதை தொடரும்
கனத்திலே - உன்னுள் எனை பதுக்கு ...
இருமனம் இனைந்த
பின் - இடைவேளை எதற்கு ...
வேறெனன் வேண்ட - உன்
காதல் போதும் எனக்கு ...

#காத்திறுந்து_கறைந்து_போ...
#கிறுக்கனின்_கிறுக்கள்_பிழை....

-



மழை வந்ததால் குடை தேடினேன்,
அவள் காதருகிலே - தஞ்சம்
கொள்கிறேன்...

#ஜிமிக்கி
#கிறுக்கனின்_கிறுக்கள்_பிழை...

-



என் அகண்ட விழிகளின் முன்னாள் - அறை அடி தான் அவள் முகம்...
ஆனால் அதுவே போதுமென்று புத்தி பேதலித்து - மனம் அவளை காதலிக்கிறது...

#கிறுக்கனின்_கிறுக்கள்_பிழை...

-



வாலிபத்தில்
ஒத்துழைத்த உடலோ!
ஒய்வு கேட்க -
தர மாட்டேன் என்று தான்
தவிர்க்க முடியுமா,
மரணத்தை தான்
மறுக்க முடியுமா...

கொடிது கொடிது முதுமையில் தனிமை கொடிது...
வாழத்தான் ஆசை வயதாகி விட்டதே....

#கிறுக்கனின்_கிறுக்கள்_பிழை....

-



அன்று அதிகம் பயன்படுத்திய தொலைபேசி எண்கள் தான் - இன்று அலைப்பதற்க்கு நேரமின்றி அகப்பட்டு கிடக்கிறது Contact list ல்....

அன்று அன்பால் நிரம்பி வழிந்த INBOX - இன்று Company msg கலால் நிரப்பப்படுகிறது...

அன்று பிறந்தநாளை மனப்பாடம் செய்த Treat கேட்ட நாள் போக - இன்று மறந்து மன்னிப்பு கேட்கும் நிலைக்கு தல்லப்பட்டு விட்டோம்...

#அன்றும்_இன்றும்
#கிறுக்கனின்_கிறுக்கள்_பிழை....

-



களைப்பிற்க்காக ஓய்வெடுக்க வந்தவன் - கவிதை கிறுக்கி களைப்பை போக்கி கொள்கிறேன்.....!

#கிறுக்கனின்_கிறுக்கள்_பிழை...

-