QUOTES ON #எப்படிசொல்வேனடி

#எப்படிசொல்வேனடி quotes

Trending | Latest
22 APR 2018 AT 22:15

எப்படி சொல்வேனடி....

என் மீதான கோபம் கடத்த
நீர்க்குமிழிகளை உடைத்து
விளையாடிக்கொண்டிருக்கிறாய்
உன் கோபம் தணிக்க
காதல் நிறைத்து குமிழியாய்
மாறியது நானென்று அறியாமல்....

-


21 APR 2018 AT 19:40

எப்படி சொல்வேனடி......



கடற்கரையில் விளையாடும் பொழுது
அலை நீரை வாரி தெளிக்கையில்
சேர்ந்தே வரும் கரை மணல் போல்
கோபம் கொண்டு நீ கத்துகையிலும்
ஊடே வருகிறது உன் காதல்...


-


20 JUN 2017 AT 18:49

எப்படி சொல்வேனடி

நிலவை மறைக்கும் மேகம்
அதை கலைக்கும் காற்று
இதன் பின்புலம் அறிந்தேன்
நெற்றி விழும் கற்றை முடியை
நீ ஒற்றை விரலில் விரட்டும் அழகில்

-


22 APR 2018 AT 20:39

எப்படி சொல்வேனடி...


திட்டமிடப்படா பயணத்தின்
சாலை வளைவாய்
அனிச்சையாய் மேலோங்குகிறது
உன் மீதான காதல்...

-


21 APR 2018 AT 23:58

எப்படி சொல்வேனடி....


மழைக்குபின் கிளையின் சாரலாய்
மென் முத்தமிட்டு என்னைஅலுவலகம்
அனுப்பியபின்
கட்செவியிலோ குறுஞ்செய்தியிலோ
நீ எனக்கு அனுப்பும்
மின்முத்தங்கள்....

-


6 DEC 2017 AT 14:54

நீ ரகசியம் ஏதோ சொல்ல
காது கொடுக்க வந்தவனை
காதலோடு போகச்செய்வது
உன் குரலுக்கு மட்டுமே சாத்தியமாகிறது!

-


5 OCT 2018 AT 11:53


எப்படி சொல்வேனடி....

எத்திசை திரிந்தாலும்
வடதிசை அமரும்
தேவவாக்கினைப்போல
நீ என்னென்ன செய்தாலும்
நான் எங்கெங்கு சென்றாலும்
உன்னை நோக்கியே திரும்புகிறது
என் காதல்....

-


1 DEC 2017 AT 15:25

எப்படிச் சொல்வேனடி...

மருதாணி வைத்து எடுக்கும் பொழுதினில்
தயை செய்து வெட்கப்படாதே...
யார் அதிகம் சிவப்பதென்று
பெரும்போட்டியே நடைபெறுகிறது.....

-


20 JUN 2017 AT 17:09

எப்படி சொல்வேனடி

நீ என்னுடன் இல்லா நாட்களில்
நீ தரும் கதகதப்பை என்னுள் புகுத்துகிறது
உன் விரல்பட்ட கோப்பையின் கைப்பிடி....

-


15 DEC 2018 AT 1:11

எப்படி சொல்வேனடி....

என்னை பார்த்துக்கொண்டே
மாடியில் துவைத்த உடையை உலர்த்துகிறாய்...

சிக்கிக்கொள்வது என்னவோ
நீ இடும்
பிடிப்பு ஊக்கியில்
துணியும் நினது விழி நோக்கினில்
என் இதயமும்...

ஸ்ரீ

-