QUOTES ON #அன்றும்இன்றும்

#அன்றும்இன்றும் quotes

Trending | Latest
28 FEB 2020 AT 20:59

அன்றும்
இன்றும்
👇👇👇

-


4 OCT 2020 AT 5:26

நிலவும் மனிதனும்
தன் மறுபக்கத்தை
மறைத்தே வாழ்வது...

-


14 NOV 2018 AT 19:19

வெள்ளை மனதுடன் வெள்ளந்தியாய் இருந்தது குழந்தைப் பருவம்..

நல்ல மனதுடன் இன்று
அட ! இவன் ஒன்றும் லாக்கியில்லாதவன் என்று ஏளனம் வேறு...
எல்லாம் காலத்தின் கொடுமை....

-


14 NOV 2018 AT 13:36

குழந்தை பருவத்தில் வாழும் என் பிள்ளைகளுக்கும்,
முதிர் பருவத்தில் தவழும் என் பெற்றோருக்கும்,
இடையே...
நான் காற்றில் ஆடும் பட்டமாய்....

-


25 NOV 2018 AT 12:13

அன்று,

சேலை கண்டு
ஆங்கிலேயன் மனைவி....

கையில்லை காலில்லை
எப்படி அணிவது இதை?....

இன்று,

அதே கேள்வி நம்
பிள்ளைகளிடம் இருந்து....

-


30 DEC 2018 AT 8:52

அன்று என் கவிதைகள்
நான் மட்டும் படித்திட
இன்று நான் படைத்ததை
பலரும் இங்கே ரசித்திட....

-


30 DEC 2018 AT 9:00

அன்று நட்புகள் நேரில் கண்டு மலர்ந்தன...
இன்று வலைதளத்தில் பரந்து
விரிந்தன...

-


30 DEC 2018 AT 8:44

அன்று வானமே எல்லை என்று வாழ்க்கை சென்றிட...

இன்று வானம் தாண்டி பார்க்கவும்
வாய்ப்பு கிடைத்தது...

-


14 NOV 2018 AT 15:49

குழந்தையா இருக்கும் போது,
ஜாலியா பேசுது மனசு...
முதுமை வந்த போது,
காலியா போச்சு பேச்சு...

-


30 DEC 2018 AT 8:19

அன்று பொருட்கள் தரம் கொண்டு விற்பனை ஆனது...
இன்று அதன் விற்பனை இலவசம் துணை கொண்டே...

-