அன்று!
தேடிவந்து
அருகில் நின்றாய்!
இன்று!
தொலைத்துவிட்டு
எதிரில் நிற்கிறாய்!
நாளை?!-
அன்று
அது வேண்டும்
இது வேண்டும்
என்று
அனைத்தையும்
ஆசைப்பட்டேன்
இன்று
எதுவும் வேண்டாமென
உணர்வேன் என
தெரியாது !-
பிடித்தவர் சொற்கள்
முன்பு போல் இன்று
இல்லை
என்பதெல்லாம்...
அடைகாக்கும்
பறவையின்
முட்டை ஒன்று
குறைந்தாலும்
தன் சிறகினை
அடித்து
பதைபதைப்பை
சொல்கின்ற
சாயல்...❤️
-
அன்று
உன் அருகில்
நிற்பது பெருமையாக இருந்தது!
இன்று
தைரியமாக சொல்ல வந்தேன்
நேசிக்கிறேன் என்று!
நாளை
நினைவில் சுமந்த உன்னை!
இதயத்தில் சுமக்க போகிறேன்!-
அன்பே நீயோ அன்று
என்னை மறந்து
மறைந்து போனாய் ,
என் மனமோ என்றும்
உன் நினைவுகளால்
மரமாக வேரூன்றி நிலைத்து நிற்கிறது..!-
அன்று ஒளிந்திருந்து
பார்க்கும்
கலையை கற்று
தந்த நீ
இன்று மறைந்து போன
மாயம்
என்னவோ!-
அடுப்பில் வைத்த பால் பொங்கி
அடுப்பை அணைப்பது அன்று
அடுப்பில் வைத்து பால் விசிலடித்து
அணைக்க அழைப்பது இன்று-
மறைந்து போன
உன்னை மனதிற்குள்
மறைத்து வைத்து
பார்த்து கொள்கிறேன்
தினமும்....-
அன்று அதிகம் பயன்படுத்திய தொலைபேசி எண்கள் தான் - இன்று அலைப்பதற்க்கு நேரமின்றி அகப்பட்டு கிடக்கிறது Contact list ல்....
அன்று அன்பால் நிரம்பி வழிந்த INBOX - இன்று Company msg கலால் நிரப்பப்படுகிறது...
அன்று பிறந்தநாளை மனப்பாடம் செய்த Treat கேட்ட நாள் போக - இன்று மறந்து மன்னிப்பு கேட்கும் நிலைக்கு தல்லப்பட்டு விட்டோம்...
#அன்றும்_இன்றும்
#கிறுக்கனின்_கிறுக்கள்_பிழை....-