QUOTES ON #அன்பு

#அன்பு quotes

Trending | Latest
10 JAN 2020 AT 11:50

எழிலான இன்பங்களை
தன்னுள் கொண்டே
அன்பான சிறகினை
மற்றவர்க்கு இரவல் தருவதே
அன்புடைமையின் தொடக்கம் ...

-


28 OCT 2020 AT 20:07

கொடுத்தவனுக்கு
கொஞ்சமாகவும்
மறுத்தவனுக்கு
மிதமிஞ்சியும்
கிடைப்பதே அன்பு!

-


28 NOV 2017 AT 8:29

தொலை தூரத்திலிருந்தும் அருகில் இருந்தோம்...
#அன்பு
அருகிலிருந்தும் தொலைந்து போனோம்...
#தொ(ல்)லை பேசி
The distance was too long,
But, the love bound us...
Now, we are near to each other ...
But, we lost our love...
Because, of this C(H)ell Phone...

-


12 NOV 2019 AT 23:34

திகட்டுவதாய் உணர்த்திய
சமிக்ஞைகள் அறிந்த பிறகு
மொத்தமாய் விலகி இருக்கிறேன்
நீ விரும்பும் அளவுக்கு
அன்பை குறைக்கத் தெரியவில்லை

-


19 JUN 2019 AT 0:42

என் அம்மாவின்
புன்னகைக்குள்ளே
ஒளிந்திருக்கும்
அன்பொன்றே போதும்
என் மீதி வாழ்வைக் கடக்க

-


26 JUN 2021 AT 8:08

எதுவாக வெளிப்பட்டாலும்
அன்பு அழகு தான்...
அன்பாக வெளிப்படும்
எதுவும் அழகு தான்...!

-


7 NOV 2020 AT 17:50

Captioned..❤👇

-


28 APR 2021 AT 20:20

சொந்த காசில் சூனியம்
வைத்து கொண்ட உணர்வை
அடிக்கடி கொடுப்பது நாம்
பிறர் மீது வைக்கும் அளவில்லா
அன்பு...!

-


28 MAY 2021 AT 8:04

இத்தனைக்கு பிறகும்
இன்னுமென்ன இழுத்து
பிடிக்கிறதிந்த வாழ்வை...
அறுந்து போக மறுக்கும்
அன்பின் இழையொன்று தான்...!

-


9 MAY 2021 AT 8:48


அம்மா ❤

-