சுவாசிக்கும் காற்றில் நெகிழி வாசம்;
வசிக்கும் இடத்தில் நெகிழி குப்பைகள்;
தினமும் போராடி கொண்டு இருக்கிறோம்,
விடிவு காலம் வர மறுக்கிறது.
எங்களை கொண்டு வியாபாரம் செய்யவும்,
எங்களை கொன்று ருசிபார்கவும் தெரிந்த
மாந்தார்களே, எங்களை வாழ வைக்க
உங்களால் முடியாத?
மாசு அடைந்த எங்கள் உலகில்,
நாங்கள் எவ்வாறு ஆரோக்கியமாக இருப்போம்?
எங்களை ருசி பார்கும் தாம்?
உங்களை சார்ந்த மற்றவர்?
போதும், எங்கள் இருப்பிடத்தை அழித்தது;
போதும், எங்களை தினம் தினம் கொன்றது;
உறுதி மொழி எடுங்கள்: வேண்டுகிறேன்,
நெகிழி ஒழியுங்கள், மகிழ்ச்சியை நிலைநாட்டுவோம்.
-