QUOTES ON #KURALVENBA

#kuralvenba quotes

Trending | Latest

கட்டிவைத்த
பைந்தமிழ் முட்டி
சிதறு தடி உன்
புன்னகையில்..!

-


15 JUL 2018 AT 0:46

பிணைதல் விடுப்பின் இரவன்றும் நம்மின்
அணைதலுக் கேது விடுப்பு?!

-


20 MAY 2018 AT 8:30

தொழில்நுட்பம் வாழும் உலகில் எளிதில்
அழிக்க முடியா உயிர்.

அழைத்திடத்தான் வந்திடுவான் கைக்குள்; பலரும்
உழைத்திடத்தான் பெற்றான் உயிர்.

கோடித் தகவலில் கேட்டதைச் சீக்கிரம்
தேடித் தருவான் அவன்.

நம்பிக்கை கொண்டு பயணம் புரிவோர்க்குத்
தும்பிக்கை ஆனான் அவன்.

அதிவிரைவில் சேவைகள் செய்யும் பலரின்
மதிநிறைந்த தோழன் அவன்.

-


2 OCT 2019 AT 19:29

ஊற்றென நேசி உனையே பிறந்திடும்
கீற்றென இன்பமாய் வாழ்வு

-


21 JUL 2019 AT 11:57

Yoga kural

உடல்வளைத்தல் என்பது யோகக்கலை அன்று
உயிரின் வனப்பே அது.

Yoga is not about touching your heel,
It is about feeling your soul....

-


17 JUN 2018 AT 13:01

சேமிப்பில் வைத்திடும் சேதிகள் மாற்றாரில்
காமிப்பின் தீர்ந்தோமே நாம்.

எளிதினில் கூகுளில் கேட்டுப்பின் சிந்தை
உளியினில் கூர்தீட்டு நீ.

செயற்கையாக வந்த செயலியொன்றால் நம்முள்
இயற்கையாகிப் போனா னவன்.

தேடல் மிகுந்துள வாழ்வாறைத் தாண்டவோர்
ஓடமாய்க் கூகுள் கிடைத்து.

அறிவாளிப் பிள்ளையை ஆக்கமாய் வைத்து
செறிவாய் உனைநீயு மாக்கு.

-


19 JAN 2020 AT 13:24

நன்றி மறக்கும் நெஞ்சம்.

-



துரோகம்
எங்கு சென்றாலும்
துரத்தும்

-



வேசம் வேடிக்கையாகும்..!

-



தனிமை
திறமைகளை
முடக்கும்..!

-