QUOTES ON #புறக்கணிப்பு

#புறக்கணிப்பு quotes

Trending | Latest
5 NOV 2019 AT 22:57

இழப்பதற்கு
இனி ஒன்றுமில்லை
இருந்தும்
பயணிக்கவே
ஆசைப்படுகிறது
புறக்கணிப்பின்
பாதைகள்!

-


23 NOV 2019 AT 19:01

தவறிய அலைபேசி
அழைப்புகள்....
தட்டிவிட்ட மணலாய்
உதிர்ந்து கிடக்கிறது
புறக்கணிப்பின்
பக்கங்களில்!

-


22 SEP 2019 AT 16:12

உன் கவனிப்பில்
புறக்கணிக்கப்படும்
பலநேரங்களில்
புரிந்தும் புரியாமல் நீ...
புறம்பாகி விடுவேனோ
பயத்தில்  நான்!

-


16 OCT 2019 AT 21:31

என்ன
செய்யபோகிறாய்?
👇👇👇

-


10 MAY 2019 AT 13:58

நீ இன்றி வந்த
நின் புகைப்படத்தில்
நீ புறக்கணித்தது
உன்னையா?
என்னையா??

-


11 MAY 2019 AT 12:13

கிளைகளால்
புறக்கணிக்கப்பட்ட
இலைகள்......
விலகியே
வீழ்கிறது
வாசனையிழந்த
சருகுகளாய்!

-


11 MAY 2019 AT 12:08

காற்றின் புறக்கணிப்பில்
கார்மேக வழித்தடம்
வேற்றிடம் சென்றதோ
வெறுமையாய் வானம்
மழையின்றி !

-


10 MAY 2019 AT 13:48

சமயத்தில்
புறக்கணிப்பு
மிகச் சிறந்த ஆசான்...

-



யாரும் கவனிக்காது
அனாதரவாய் நிற்கிறது
அன்பால் புறகணிக்கப்பட்ட மனம்


-


11 DEC 2021 AT 10:57

புறக்கணிக்கப்
படும்போது
பொங்கி எழு !
போற்றப்படும் போது
பொறுமையாக இரு !!

-