உயர்ந்து நிற்கும் ஒவ்வொரு
தொழிலின் பின்னும்
கண்ணுக்குத் தெரியா
பல உழைப்பாளர்களின்
வியர்வை இருக்கும்...
அதுவே அத்தொழிலை
உயரச் செய்திருக்கும்...-
சிந்தும் உன் ஒவ்வொரு
துளியிலும்
சிதறும் உன் தடைக்கல்
பார்ப்பாய்..!
உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்...
-
உழைப்பு
ஒரு சொட்டுத் தண்ணீர் ஆனாலும் ஒரு வாய் அன்னம் ஆனாலும் வேர்வை சிந்தியே அத்தேவையைப் பூர்த்தி செய்வான்
உழைப்பை நம்பும் உழைப்பாளி💪
-
பிறக்கும்போது
உங்கள் உழைப்பை
பார்த்தவன் 👉நான்
உங்கள் உழைப்பால்
உயர்ந்தவன் 👉நான்
உங்கள் உழைப்பால்
உழைத்துக்கொண்டு இருப்பவன் 👉நான்
உங்களின் அடையாளம் 👉நான்-
கடிகார முட்களின் சுழற்ச்சியாய்
சூரியன் உதிக்கும் நேரம் முதல் -இரவு
நிலவு மறையும் நேரம் வரை
தன் குடும்பத்திற்க்கு என்றால் -அதிக
ஆசையும், ஈடுபாடும் கலந்து அதிவிரைவாகவும்..
தனக்கு என்றால் மட்டும் ஏனோ சற்று சோம்பேறியாகவும்...
உணவருந்துவதற்கென
எவ்வித இடைவெளி இல்லை எனினும்
எஞ்சிய சாதமும்,பழைய சாதமும் தேவாமிர்தமாய் இருக்க அதையே உணவாய் உட்க்கொண்டு
ஊதியமும் பெறாத, ஓய்வும் இல்லாத
அரசாங்க வேலையை அரசாளும் என் இளவரசி
அம்மா-
தன்மான வாழ்வோடும்
வளமான வாழ்வோடும்
நலமான வாழ்வோடும்
வாழ்க்கையை வாழும்
தொழிலாளர்கள் அனைவருக்கும்
உழைப்பாளர் நாள் வாழ்த்துகள்.
-
வியர்வையின் சுவை உப்பு:-
உழைப்பவன் இன்றி உயர்ந்தவன் இல்லை.
உப்பு சுவை இன்றி
உயர் உணவும் முழுமை அடைவதில்லை.
கடலில் உப்பு நீர் இன்றி
வான் மழையின் நீரும் இல்லை.
உழைப்பவனை மதிப்போம்
உயர் எண்ணங்களால் அவரை சிறப்பிப்போம்.-
கருவில் தோன்றிய மழலை, தன் கடைசி மூச்சு நிற்கும் வரை... உணர்த்துவது ஒன்றுதான் *_உழைப்பு_*
அன்பு என்ற ஒற்றை சொல்லில் உழைப்பின் வலி காணாமல் போகும் 😍😍
உலகத்தை உழைப்பால் கட்டமைக்கும் அணைத்து உழைப்பாளிகளுக்கும்..... *சர்வதேச உழைப்பாளர் தினம் வாழ்த்துக்கள்* 🌾🛠️🔨💊🖥️📚
😍முகமறியா முகவரி 😍-