18 AUG 2019 AT 10:25

சுள்ளிதனை
தான் பொருக்கி..
சுருங்க வயிற்றுக்கு
சுடுகஞ்சி தினமூற்றி
எஞ்சிய நாள்முட்டும்
அவனுக்கே - ஊழியம்
தான்செய்த தாயவளோ !
ஊரெல்லையில்
அக்கறையாய் தவமிருக்க..
அவனோ - உதவாக்கரை
முகஸ்துதியற்கு..
ஊதியமெல்லாம்
தான் செய்தான்
ஊதாரி செலவிற்கே..

- Saravanan.J