பிறந்த குழந்தைக்கு அன்னை முகம் மகிழ்ச்சி,
தவழும் குழந்தைக்கு தத்தி தாவிட மகிழ்ச்சி,
வளரும் குழந்தைக்கு ஓடி பிடித்திட மகிழ்ச்சி,
பருவ குழந்தைக்கு காதல் புரிந்திட மகிழ்ச்சி,
மணமான குழந்தைக்கு தன் குழந்தைள் மகிழ்ச்சி,
குடும்ப குழந்தைக்கு பணம் தேடிட மகிழ்ச்சி,
நடுத்தர குழந்தைக்கு சாதித்திட மகிழ்ச்சி,
ஓய்வு பெற்ற குழந்தைக்கு நிம்மதி
தேடிட மகிழ்ச்சி,
முதிய குழந்தைக்கு மீண்டும் குழந்தையாய்
மாறிட மகிழ்ச்சி...
வாழ்நாள் முழுவதும்,
குழந்தையாய் இருந்து விட்டால்,
என்றென்றும் மகிழ்ச்சி...- S Roses S
3 FEB 2019 AT 19:53