குந்தவி   (✍🏻குந்தவி [Kundhavi✒️])
529 Followers · 92 Following

read more
Joined 14 July 2017


read more
Joined 14 July 2017
7 NOV 2021 AT 18:44

உங்களுக்கு
வேண்டாமென்பதை
மற்றவர்களிடம்
திணிக்காதீர்கள்!

முடிவெடுக்க
அவர்களுக்கும்
உரிமையுண்டு.

-


7 NOV 2021 AT 10:15

சந்தேகங்களுக்கு
விளக்கங்கள்
வீண்.

-


17 AUG 2021 AT 22:38

எண்ணி மகிழ்வதற்கு காரணம்
ஒன்றுமே இல்லையா..!
பரவாயில்லை.

நம்மைச் சா(சே)ர்ந்தோரின்
வளர்ச்சியில் விளைந்திடும் அது.

-


9 AUG 2021 AT 11:18

ஆள் யாருமில்லா அடர்வனந்தனிலோ
அதரங்கள் அசைந்திடா மௌனத்திலோ
தொந்தரவுகள் இல்லா தொலைதூரத்திலோ
தவம் மேற்கொள்வதென்ன வாழ்க்கை..?

சூதும் வாதும் புடைசூழ் புவியில்
பொய்யும் புனைசுருட்டும்
மலிந்த நிலையில்
தந்திர நரிகளின்
நர்த்தனங்களுக்கு நடுவில்
பச்சோந்தி பிரதிகளான பல
முகங்களுக்கு மத்தியில்
மூச்சு பிடித்து முட்டி முளைத்து
நிமிர்வதன்றோ ஆகச் சிறந்த பெருந்தவம்!

-


5 JUN 2021 AT 12:39

இருத்தலை
இயன்றளவு
இயற்கையும்
இருத்தித்தான் வைத்து
இருக்கிறது...



புணரமைக்கின்றோம்
பேர்வழி என்று - பாவம்
புலம்ப வைத்து விட்டோம்
பூமியை!

-


5 JUN 2021 AT 11:47

வளங்களின் வாசலுக்கு
வாடகைக்கு வந்தவர்கள்
நாம்.

அவை எனக்கானவை
என்பதற்கு
எள்ளளவும் உரிமையில்லை.


-


28 MAY 2021 AT 22:58

அத்தன சத்தத்துக்கு மத்திலயும்
நமக்கு பிடிச்ச பாட்ட
காது கச்சிதமா கவனிச்சுருதே...

அப்படித்தான் சார்.. இந்த மனசும்..

ஆயிரம் யோசனைக்கு நடுவுலயும்
பிடிச்ச விஷயத்தையும், உறவையும்
முன்ன கொண்டு வந்து நிறுத்திரும்.

-


26 JAN 2021 AT 8:32

மெய்யான அழகென்பது
மனதைத் தொட்டப் பின்னே
கண்களை வந்தடைகிறது.

-


5 DEC 2020 AT 21:10

எங்கு விழுந்திருந்தாலென்ன!
வெளிவரும் வேட்கை இருந்தால்
தகுந்த தளம் என்பது தேவையில்லை.

-


16 NOV 2020 AT 15:46

பிறருக்கு தன் மேல் இருப்பது
போலி மரியாதை என்றறிந்தாலுமே
(ப)சிலருக்கு எப்போதும் அது தேவையானதாய் தான் இருக்கிறது.

இன்னும் அந்த நோயிலிருந்து
அவர்கள் மீண்டபாடில்லை.

-


Fetching குந்தவி Quotes