மனம் என்னிடம் அதிகம் என ரோஜா
ஒரு பக்கம், அளவில் நானும் அதிகம்
என சாமந்தி மறுபக்கம்,
பூக்க உதவியவள் நான் என இலையும்,
வீழாமல் காப்பவன் நான் என நாரும்,
வாடாமல் காப்பவள் நான் என நீரும்,
பேசி தீர்க்க
பூவின் வாசனை உணராமல் கண்ணாடி
பெட்டிக்குள் ஏன் இருக்கிறோம் என எட்டி
பார்க்க, அய்யோ அம்ம்மா என்ற
அழுகுறல் அந்த பெட்டிக்குள் நுழைய
மறுத்தது
கடைசியில் அவளும் பூவும் கொஞ்சம்
அமைதியை ரசித்து முடித்தது.
-
தோல் சுருங்குவேன்
ஓர் நாள் அன்று, என்
கேட்காத செவியும்
மூடிய விழியும்
சுருங்காத உன் கன்னங்களயும்
மூடாத உன் இளமை விழியையும்
நினைவூட்டும்.
-
பின்னணி இசையெல்லாம்
அவள் பின்னி நடந்த
காட்சிகளை மீண்டும்
ஒளிபரப்பிய படி
மங்கி மறையுது-
என் மூச்செல்லாம் உன் பேரை
கூச்சல்லிட்டதே ஒரு முறை
கூடவா உன் இதயம்
தொடவில்லை-
முட்கள் எல்லாம் காற்றில்
வந்து ஸ்வாசம் கொல்வதென்ன
மழையெல்லாம் உடல் கீரும்
கண்ணாடி துகள் ஆவதென்ன
இது என்ன இவள் என்ன
என் மரணம் ஆவதென்ன
-
உயரம்
என்றுமே இன்பம் அல்ல
ஆழம் பெரும் துன்பம் அல்ல
அள்ள அள்ள பொங்கும் இன்பம்
எல்லாம் ஆழத்தில் தான் கிடக்குது
-
தனிமை
அந்த உச்சி மலை குழியில்
ஒரு மழை துளி,
இயற்கையின் வாசனை அறியவில்லை,
பறவை வராத உயரம்
காற்று படாத ஆழம்
மேகங்களின் பிம்பம் விழாத இருள்
வெயில் வந்தால் உயிரை விட
காத்து கிடக்கும் அந்த துளி.-
கண்ணாடி சிந்தனை
காட்சியின் பசி
பார்த்தும் தீரவில்லை
பசியும் ஆரவில்லை-
இதற்கு மட்டும் அவள்
சலித்துக்கொள்ளவே இல்லை
இதயத்தை இரும்பாக்கி கொண்டு
அத்தனையும் தாங்கினாள்-
காதல்
கத்தியால் மணிகட்டில் ஓவியம் வரையும்
கண்களில் மருதாணி பூசும்
கண்ணங்களுக்கு மழை துளி
பரிசலிக்கும்
இதழ்களை வெறுமைக்கு வாடகை விடும்
வயிற்றுக்கு விரதம் கொடுக்கும்
இதயம் கெடுக்கும்
சில நாள் குளியல் மறக்கும்
பல நாள் தனயே மறக்கும்
பிரம்மயில் மிதக்கும்.
-