தமிழ் கவி   (அசோக் ராகவன்)
136 Followers · 66 Following

read more
Joined 10 October 2017


read more
Joined 10 October 2017

காலம் வேகமாக ஓடுகிறது என்கின்றவர்கெல்லாம்
நிகழ்காலத்தில் வாழாதவர்களே

-



பெண்ணின் உவமையே நிலவே
மேகதோட்டத்தில் மலரும் ஒற்றை ரோஜாவே
உன் கூந்தலுக்கு நட்சத்திரங்களை மலராக சூடிக்கொண்டையோ ?
உன் ஆனவன் எவனோ?
உங்கரம் தழுவும் அலையோ?
சொல்லிவிடு முடிந்தால் சேர்த்துவைக்கிறேன்.



-



சமையல்கட்டு


திருமணமென்னும் திருவிழாவில்
வாயில்லா ஜீவராசிகளின் நரகமென்னும்
சமையல்கட்டுஉம் சேர்ந்தே நிட்சயம் செய்யப்படுகிறது

-



சுவாசிக்கும் ஜீவகாற்றின் நிறமென்ன
தாகம்தணிக்கும் தண்ணீரின் நிறமென்ன
மழலை குழந்தை சிரிப்பின் நிறமென்ன
மூப்படைந்த கிழவியின் அன்பின் நிறமென்ன

அழகானவை அனைத்தும் நிறமற்றுள்ளதோ
அழகில்லா அனைத்தும் நிறமுற்றுள்ளதோ

-



காலம் யாருக்காகவும் காத்திருக்காத
டிக் டிக் ரயில் தொடர்வண்டி
அது ஓடும் ,அது ஒரு ஓடம்
வயதை கடக்கும் ,நரையை பெருக்கும்
பொறுமையை தரிக்கும்
இறுதியில் உண்மையை உணர்த்தும்.

-



புரிந்துகொள்வதற்கு இதொன்றும்
மொழியல்ல உணர்வு
காதலென்னும் அதிர்வு
பலருக்கு ஒரு விந்தையாய் எப்பொழுதும்
நிலைத்திருக்கும் கடவுளின் மடி

இனிய காதலர் தின வாழ்துக்கள்.

-



நான் யாரையும்
பணையம் வைக்கவில்லை
என்னுடைய பயணத்தில் அவர்களை வைக்குறேன்
வரவிருப்மில்லாதவர் தயவுகூர்ந்து
என்னுடையேயான பயணத்தை
நிறுத்திக்கொள்ளுங்கள்,
நான் சென்றடையும் இலக்கில்
அவர்களுக்கு நாற்காலிகளுக்கு
இடமில்லை
காரணம் அவர் என்னுடன் பயப்படவில்லை
எனபதற்காக இல்லை
காரணம் என் இலக்கை அடைந்தவுடன்
சொல்லிக்கிறேன்.

-



உனக்கு இருக்கும் அனைத்து
புடிகளும் தவறியப்பின்னும்
உனக்கு கைகுடுக்கும்
உனக்கு ஆறுதல்சொல்லும்
உனக்கு நம்பிக்கையூற்றும்
உன்னை உண்மையாக
உன்னை முழுமையாக
உன்னை நேசிக்கும

அவன் நீ

-



இது நோஜமல்ல
உன்னைக்கடந்து சென்றபின்
இது நிஜம்தான்
உன்னையாட்கொண்டிருக்கும்போது
இது அறிவிற்கு கைவிலங்கு
மனதிற்கு தீனி
உடலுக்கு பிணி
நிஜத்திடம் கைகொடு
நிழலிடம் விழிமூடு
பூக்கள் அழகினம்
உதிர்வுநாள் அது உரம்
யோசித்துப்பார் நெறிபெரும்.


-



ஆட்டின் அசரிரி வானிலிருந்து...

அதோ அவன் என் தோலை மட்டும் உறிக்கவில்லை
அவனின் தோலையும் சேர்த்தே உரித்துக்கொண்டிருக்குறான்
என்னை வளர்க்கும்போது உடுத்திய பசுந்தோலிலிருந்து அவனின் மெய்தோலாகிய புலித்தோலை.

இதுதான் பசுந்தோல் போர்த்திய புலியோ?

-


Fetching தமிழ் கவி Quotes