ஞானம் எய்துமுன் கவுதமர்
போதிசத்வராக மட்டுமே இருந்தார்.
ஞானம் எய்தியபின் அவர்
புத்தர் ஆனார்.
(709)
- புத்தரும் அவர் தம்மமும்-
Facebook : https://www.facebook.com/nurpa... read more
யாரொருவனும் பிறப்பினால்
ஒதுக்கப்பட்டவன் இல்லை.
யாரொருவனும் பிறப்பினால்
பிராமணனும் இல்லை.
(2591)
இதைக் கேட்டதும்,
தாம் உயர்வெய்திய புத்தர்
மீது வீசிய வசவுகளுக்காக மிகவும்
வெட்கப்பட்டார் அக்கிகர்.
(2592)
- புத்தரும் அவர் தம்மமும்-
எவனொருவன் எது நல்லது
என வினவப்படும்போது - எது
கெட்டதோ அதை அறிவுறுத்தி,
மறைவான வழியில் போதிக்கிறானோ
- அவனே ஒதுக்கப்பட்டவன் என
அறிந்து கொள்ளுங்கள். (2590)
- புத்தரும் அவர் தம்மமும்-
எவனொருவன் செல்வந்தனாயிருந்தும்,
இளமை கடந்த முதிய
தாய் தந்தையரைப்
பேணாதிருக்கிறானோ - அவனே
ஒதுக்கப்பட்டவன் என்று அறிந்து
கொள்ளுங்கள். (2589)
- புத்தரும் அவர் தம்மமும்-
எவனொருவன் பலாத்காரமாகவோ
ஒப்புதலோடோ உறவினரின் அல்லது
நண்பர்களின் மனைவியரோடு எல்லை
மீறுகிறானோ - அவன் ஒதுக்கப்பட்டவன்
என அறிந்து கொள்ளுங்கள்.
(2588)
- புத்தரும் அவர் தம்மமும்-
எவனொருவன் தன்
சொந்த நலனுக்காக அல்லது
பிறர் நலனுக்காக அல்லது
செல்வத்திற்காக சாட்சி கேட்கப்படும்
போது பொய்யுரைக்கிறானோ -
அவனே ஒதுக்கப்பட்டவன் என
அறிந்து கொள்ளுங்கள். (2587)
- புத்தரும் அவர் தம்மமும்-
எவனொருவன் அநாவசிய
விருப்பத்தில் - சாலையில் தனித்துப்
போகும் ஒருவனைக் கொன்று கொள்ளையடிக்கிறானோ, அவனே ஒதுக்கப்பட்டவன் என அறிந்து
கொள்ளுங்கள். (2586)
- புத்தரும் அவர் தம்மமும்-
எவனொருவன் உண்மையில் கடன்
வாங்கிக் கொண்டு ஓடியொளிந்து நிர்பந்திக்கப்பட்டால்,
'நான் உனக்குக் கடனொன்றும் தரவேண்டியதில்லையே' என்கிறானோ
அவனே ஒதுக்கப்பட்டவன்
என அறிந்து கொள்ளுங்கள். (2585)
- புத்தரும் அவர் தம்மமும்-
அருந்ததியர் இதழ்கள்
நமது இன முழக்கம் : ஆசிரியர் - பெரு.எழிலழகன்.
டெம்மி 1/4. 12 பக்கங்கள். திங்கள் இதழ்.
சென்னையில் இருந்து வெளிவந்தது.
ஆண்டு 1995.
எழில். இளங்கோவனின்
'அருந்ததியர் இயக்க வரலாறு'
எனும் நூலிலிருந்து.-
அருந்ததியர் இதழ்கள்
அருந்ததி : ஆசிரியர் - ராஜசெல்வம் சுப்பையா.
டெம்மி 1/4. திங்கள் இதழ்.
12 பக்கங்கள். சாத்தூரில் இருந்து வெளியானது.
ஆண்டு 1991.
எழில். இளங்கோவனின்
'அருந்ததியர் இயக்க வரலாறு'
எனும் நூலிலிருந்து.-