காலைக் கதிரவன்
கண்விழியால் மலரும்
மலர் போல,
கருணை கரங்களின்
கனிவினால் மலரட்டும்
"திருஞானசம்பந்தர் கல்வி அறக்கட்டளை" மாணாக்கர் கனவுகள்!
- திருநாவுக்கரசர் நற்செயல் மன்றத்திற்காக.-
ஒருவர் மீது ஒருவர் கொண்டிருக்கும் மரியாதையிலிருந்தே பரஸ்பர அன்பு பிறக்கிறது.
-
நின்று பாருங்கள்
வாக்களிக்கும் இயந்திரத்தின் முன்பு!
நம்முடைய (நாட்டின்) வளர்ச்சி இங்கிருந்துதான் தொடங்கப் போகின்றது!-
ஒரு மனிதன் அறம் நிறைந்தவனாக வாழப் புத்தகம் கற்றுத்தரும்.
மனித மனங்களையும், மனித மேன்மையையும் அறிய, அவனுக்கு நேரும் அநீதிகளைக் கண்டு கண்ணீர் சிந்தப் புத்தகமே கற்றுத் தரும்!-
எல்லாருக்கும் அளிக்க முடிந்த
ஒரே செல்வம் "கல்வி"
தான் கற்ற அனைத்தையும் மாணாக்கர்களுக்கு பகிர்ந்து மகிழ்பவர்கள் "ஆசிரியர்கள்"
இனிய ஆசிரியர் தினம் நல்வாழ்த்துக்கள்!
திருஞானசம்பந்தர் கல்வி அறக்கட்டளைக்காக-
நல்ல மாணவராக
இருக்க விரும்புவர்தான்
நல்ல ஆசிரியர் ஆகின்றார்.
இனிய ஆசிரியர் தினம் நல்வாழ்த்துக்கள்!-
நிவாரண உதவித் தொகை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அன்பு உள்ளம்
அருள்தரும் காந்திமதி அம்பாள் சமேத அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில் அறங்காவலர் குழுத் தலைவர்
சீர்மிகு.மு. செல்லையா-
திருநாவுக்கரசர் நற்செயல் மன்றம்
சார்பாக
நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு
வெள்ள நிவாரண உதவித் தொகை
வழங்கல் - 23.12.2023 (சனிக்கிழமை)-
திருநாவுக்கரசர் நற்செயல் மன்றம் நடத்தும் திருஞானசம்பந்தர் கல்வி அறக்கட்டளை மூலம் கல்வி பயிலும் மாணவர்களுக்கு
தீபாவளிப் பண்டிகை (2024) இனிப்பு, பட்டாசுகள் வழங்கி மகிழ்ந்த உறுப்பினர் சீர்மிகு.பி.இலட்சுமணன் குடும்பத்தினர் வாழ்க பல்லாண்டு.
மகிழ்வித்து மகிழ்வோம்.-
கருணை உள்ளங்களே,
வணங்கி வேண்டுகிறேன்.
தங்களது பிறந்த நாள்/திருமண நாள் போன்ற நல்ல நாட்களில், அறம் செய்ய விரும்பும் போது "திருஞானசம்பந்தர் கல்வி அறக்கட்டளை"-க்கு நன்கொடை அளித்து மகிழுங்கள்.
'புண்ணியம் கோடி ஏழைக்கு எழுத்தறிவித்தல்'
திருநாவுக்கரசர் நற்செயல் மன்றத்திற்காக,-