Dhayaneswaran P   (Dhaya)
240 Followers · 64 Following

Poet
Writer
Translator
Joined 6 February 2018


Poet
Writer
Translator
Joined 6 February 2018
26 DEC 2023 AT 20:46

இதோ -
இந்தப் பூமியில்
முக்கால் விழுக்காடு
விரிந்த ஆழி,
மீதத்தையும் அளக்கும்
பேராசை கொண்டு
வெகுண்டு எழுந்தாள்;

அதில்,
அன்று மரித்தவர் ஓலம்
இன்றும் அந்தப்
பேராழியின் பேரிரைச்சலோடு
அலைந்துகொண்டே இருக்கிறது.

ஆழிப்பேரலை, 26 டிசம்பர் 2004

-


31 OCT 2023 AT 19:26

Love is always incomplete. It blossoms as many times as the honeybees die. Love might glue but make us slip anywhere. It gets pertinent to time and need. Few pretend their conscience while the values and morals are dynamic. Few are happy with the incompleteness without pretending the conscience with their own values and beliefs. Let love be incomplete but never demanded for.

- Dhaya

-


15 MAY 2023 AT 19:03

Love is not a social institution. So is friendship. Both are illusionistic, double the sky and sea. The illusion's actual graveyard is the tendency to fall for new / more attractive human in Life.

-


24 JUL 2022 AT 8:56


#அவரவர்_இருண்மைகள்

!முகப்பில் வாசிக்கவும்!

-


23 MAY 2022 AT 8:24

my eyes ground to see the withered;

While I worry for all the withered,
You are one among the ones
fragrancing my diary of grave.

(to my friend, Late Aravind Krishnan, who embraced COVID delta a year ago)

-


7 MAY 2022 AT 19:03

ஒரு மயிரும் இல்லை;

அதனாலேயே வானின் நீளம்
பெண்களின் மயிர் நீளத்தொடு
ஒப்பிடப்படதில்லை இதுவரை.

-


2 MAY 2022 AT 20:45

இருக்குமன்று மட்டும்
இந்த பூமி
அந்தச் சூரியனுக்கு
முழு தரிசனம் செய்யவிட்டுச்
சற்று விலகிச் சுழல்கிறது

-


20 APR 2022 AT 23:40

ஒரு மெழுகுவர்த்தி
தன் நரம்பை எரித்தபடி
உடம்பை உருக்கிச்
செத்துகொண்டிருந்தது.

பற்றவைத்தவர்க்கு வெளிச்சம்;
மொத்தமாய்ச் செத்தபின் அதன்
உருகிய வடிவம் என் மூளை.

-


17 APR 2022 AT 11:50

செடிகளே இல்லமால் பூக்கள் மலர்வதும்
செவ்விதழ் கொண்டவள் சட்டெனச் சிரிப்பதும்
சிரிப்பின் மணத்தில் ஆயிரம் முல்லைகளும்
அலர்ந்த சிரிப்பினில் சோமபானக் கிறக்கமும்
கிறங்கிய நொடியியினில் உயிர்த்த காதலும்
பிரிவினும் தவிர்ப்பினும் மாயா மாய உலகம்.

-


15 APR 2022 AT 13:44

உரிமை என்ற பெயரில்
தொன்று தொட்டு அந்தப்
பூக்கள் பறிக்கத்தான் படுகின்றன;
கல்யாணம் தொடர்ந்து முதலிரவுக்கும்
கல்லாய்ப் போன இல்லாத கடவுளுக்கும்
இழவு வீட்டில் மரியாதை எனும் பெயரால்
பிண வாடையைக் கட்டுப்படுத்தவும்
பெண்கள் கேசதுக்கு மணம் கூட்டவும்;

அன்றாடம் போர் என்ற பெயரில்
மனித உயிர்களும் அத்தனை உரிமையுடன்
அந்தப் பூக்களைப் போலப்
பறிக்கத்தான் படுகின்றன; அந்தோ!
பிணங்கலால் பயனும் உண்டோ
பூக்களைப் போலக் கோர்க்க
இவ்வுலகில் நாரும் உண்டோ !

-


Fetching Dhayaneswaran P Quotes